நவம்பர்(2020) மாத ஜிஎஸ்டி வருவாய் எவ்வளவு?

புதுடெல்லி: சென்ற நவம்பர் மாதத்தில் மட்டும், ரூ.1,04,063 கோடி, ஜிஎஸ்டி வருவாயாக கிடைத்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய நிதியமைச்சகத்தின் கூறப்பட்டுள்ளதாவது; நவம்பர் மாதம் வசூலான மொத்தத் தொகையில், சிஜிஎஸ்டி தொகை ரூ.19,189 கோடிகள்.

* எஸ்ஜிஎஸ்டி தொகை ரூ.25,540 கோடிகள்

* ஐஜிஎஸ்டி தொகை ரூ.51,992 கோடிகள்

* செஸ் வரியாக ரூ.8,242 கோடிகள்

என்பதாய் உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் கிடைத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ.1,05,155 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.