“கபாலி”: உண்மை வசூல் எவ்வளவு?

டந்த 16 ஆண்டுகளாக தமிழ் திரைப்பட துறையில் பத்திரிகையாளர், திரைப்பட விநியோகஸ்தர்,  திரைப்படங்களின் வெற்றி தோல்வியை நிதர்சனமாய் சொல்லும்  வசூல் தகவல்களை சேகரிப்பவர்,   1987 முதல் வந்து கொண்டிருந்த, தமிழின் ஒரே சினிமா ட்ரேட் தகவல்களை தரும்தமிழ்நாடு எண்டர்டெயின்மென்ட் பத்திரிகையின் பொறுப்பாசிரியர், 1996 முதல் ஆசிரியர்… ராமானுஜம், ” கபாலி” படத்தின் வசூல் குறித்து சொல்கிறார்:

 ராமானுஜம்
ராமானுஜம்

“ கபாலி”  22.7. 16  அன்று ரீலீஸ் ஆனதிலிருந்து உலகம் முழுமையும் 100 கோடி ஒரே நாளில் வசூல் என்று தயாரிப்பாளர் தரப்பில்  தகவல் வெளியிடப்பட்டது

உலகம் முழுமையும் 4600 திரைகளில் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் ரீலீஸ் என அறிவித்தனர்.    பிரபல பத்திரிகைகள் சிலவும்,  மலாய், சைனீஸ், ஜப்பான் மொழிகளில் 10  ஆயிரம் தியேட்டர்களில் கபாலி ரீலீஸ் ஆனது என செய்தி வெளியிட்டு காமெடி செய்தனர்.

தமிழகத்தில் கபாலி படத்தின் உண்மை வசூல் நிலவரம் என்ன என்பதை ஊடகங்கள் சொல்லாமல் தங்கள் இஷ்டத்திற்கு சாத்தியமில்லாத ஒரு தொகையை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினர்.

அமர்களமாக அரங்கு நிறைந்த காட்சியாக தொடங்கிய கபாலி பெருநகரங்களை தவிர்த்து மற்ற இடங்களில் இரண்டாவது காட்சியில் நொண்டியடித்ததை ஊடகங்கள்  கவனிக்கத் தவறியது.

13879410_1763851877169124_5281800747045579437_n

அதிக விலைக்கு டிக்கட் விற்க முடியது என கூறி உலக தமிழர்களும், மீடியாக்களும் எதிர்பார்த்த கபாலி படத்தை திரையிட மறுத்தனர்.  நெல்லை, திருச்சிஏரியாவில் உள்ள பலதியேட்டர் உரிமையாளர்கள். இன்று வரை கபாலி அங்கு திரையிடவில்லை (சங்கரன்கோவில், பெரம்பலூர், மதுரை திருமங்கலம்) முதல் மூன்று நாட்களும் சராசரி வசூல் ஆன கபாலி நான்காம் நாளிலிருந்து தியேட்டர்களில் 100க்கும் குறைவான டிக்கட் விற்பனை  என்ற சூழலுக்கு உள்ளானது,

வாரத்தின் இறுதி நாளான  கடந்த சனிக்கிழமை  இரவுக் கட்சி நிலவரப்படி, தயாரிப்பாளர் தாணு சென்னை நகரில் 7 நாட்களில் 7 கோடி வசூல் என அறிவித்ததன் அடிப்படையில் பார்த்தாலும் விநியோகஸ்தர்கள் படத்துக்கு கொடுத்த விலையில் அசலில்50% நஷ்டம்  ஏற்படும் என்பதே உண்மை நிலவரம்.

(1)சென்னை நகரம் – மொத்த வசூல்7 கோடி – விலை 6.50 கோடி
(2) செங்கல்பட்டு – மொத்த வசூல்7 கோடி – விலை 13 கோடி
(3) கோவை – மொத்த வசூல் 6 கோடி – விலை 12 கோடி
(4) மதுரை – மொத்த வசூல் 5.25 கோடி – விலை 9 கோடி
(5) சேலம் – மொத்த வசூல் – 3.75 கோடி – விலை 6, 25 கோடி
(6) திருச்சி – மொத்த வசூல் – 4.80 கோடி – விலை 7.20 கோடி

இதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம்.. “கபாலி” வசூல்  குறித்து, தரப்பு சொல்வதில்  எந்த அளவுக்கு உண்மை என்பதை. சரி, ஏன் இப்படி  தயாரிப்பு தரப்பு சொல்ல வேண்டும்?

அது அவர்களுக்கே வெளிச்சம்!

(படம்: “கபாலி” பட ஜூரம் ஓய்ந்துவிட்டாலும், பட்டாசு வியாபாரிகள் விடத் தயாரில்லை. வரும் தீபாவளிக்காக  “கபாலி” பட்டாசுகள், மத்தாப்புகள் தயாராகிக்கொண்டிருக்கின்றனவாம்.

பட்டாசுக்கு, “நெருப்புடா” என்றும், மத்தாப்பூக்களுக்கு “மகிழ்ச்சி” என்றும் பெயர் வைத்திருக்கிறார்களாம்!)

Leave a Reply

Your email address will not be published.