ஆர்.கே.நகரில் கைப்பற்றிய பணம் எவ்வளவு?…அமைச்சர், போலீசார் இடையே குழப்பம்

சென்னை:

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் திருவள்ளுவர் நகரில் மகளிர் சுய உதவிக் குழு மூலம் டிடிவி தினகரனின் ஆதரவாளர்கள் பணப் பட்டுவாடா செய்வதாக அதிமுக.வினர் புகார் கூறினர். பின்னர் குறிப்பிட்ட வீட்டை அதிமுக.வினர் முற்றுகையிட்டு மகளிர் சுய உதவிக் குழு தலைவி செல்வி என்வபரிடம் வாக்குவாதம் செய்தனர்.

 

தகவலறிந்த போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அங்கிருந்தவர்களை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரண¬ நடத்தினர். உடனடியாக அங்கு அமைச்சர் கடம்பூர் ராஜு அங்கு வந்தார். அப்போது அவர் கூறுகையில், ‘‘அந்த பெண்ணிடம் இருந்து 30 லட்சம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து தினகரனின் ஆதரவாளர்கள் பணப் பட்டுவாடா செய்து வருகின்றனர்’’ என்றார்.

இதற்கிடையில் காவல் நிலையம் முன் குவிந்த தினகரன் ஆதரவாளர்கள் அந்த பெண்ணை விடுவிக்க கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. உடனடியாக அங்கு துணை ராணுவம் வரவழைக்கப்பட்டு விரட்டி அடிக்கப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் எவ்வளவு பணம் பறிமுதல் செய்யப்பட்டது? என்று போலீசார் கூறுகையில், ‘‘ செல்வி என்ற பெண்ணிடமிருந்து 13 ஆயிரம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது’’ என்றனர். அமைச்சர் ரூ.30 லட்சம் பறிமுதல் கூறினார். ஆனால் போலீசார் 13 ஆயிரம் ரூபாய் என்றும் முன்னுக்குப்பின் முரண்பாடான தகவல்கள் வெளியானது.