மொபைல் சேவை நிறுவனங்கள் அரசுக்கு வைத்துள்ள பாக்கி எவ்வளவு?

புதுடெல்லி: மொபைல் சே‍வை நிறுவனங்கள், மத்திய அரசுக்கு ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்து 440 கோடியை பாக்கி வைத்துள்ளதாக சம்பந்தப்பட்ட அமைச்சகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில், மத்திய தொலைத்தொடர்பு துறை இணையமைச்சர் சஞ்சய் தோத்ரே இத்தகவலை கூறியுள்ளார்.

மொபைல் போன் சேவை நிறுவனங்கள், தொலைத்தொடர்பு துறைக்கு ரூ.1 லட்சத்து 46 ஆயிரத்து 337 கோடி நிலுவையை செலுத்த உச்ச நீதிமன்றம் கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் மாதம் 24ம் தேதி உத்தரவு பிறப்பித்தது.

அதன்படி, மொபைல் சேவை நிறுவனங்கள், தொலைத்தொடர்பு துறைக்கு நிலுவையை செலுத்தி வருகின்றன.

இதுவரை ரூ.15 ஆயிரத்து 896 கோடியை செலுத்தியுள்ளன. அதேசமயம், இன்னும் ரூ.1 லட்சத்து 30ஆயிரத்து 440 கோடியை செலுத்த வேண்டியுள்ளது. இந்நிலையில்தான இத்தகவலை வெளிப்படையாக அறிவித்துள்ளது மத்திய அரசு.