கொரோனா சிகிச்சை… செலவு எவ்வளவு?


அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிக்குச் சாதாரண வார்டில் சிகிச்சை அளிக்க ஒரு லட்சம் ரூபாய் வரை செலவாகிறது.

அதே நோயாளியைத் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்றால் , இரட்டை மடங்கு செலவாகும்.

அதாவது இரண்டு லட்சம் ரூபாய்.

ஒரு முறை நோயாளியின் ரத்தத்தைப் பரிசோதனை செய்ய  ரூ. 4 ஆயிரம் செலவாகிறது. 8 முறை ரத்தப்பரிசோதனை செய்தால் தான் சரியான ரிசல்ட் கிடைக்கும். . இந்த வகையில் ஆகும் செலவு ( ரத்தப் பரிசோதனைக்கு) ரூ.32 ஆயிரம்.

மருந்து செலவு ரூ.10 ஆயிரம்.

ஸ்டெதஸ்கோப் ,நாடித்துடிப்பு அறியும் கருவி  உள்ளிட்ட உபகரணங்கள் வாங்க ஆகும் செலவு: ரூ. 10 ஆயிரம்.

நோயாளிக்கு நேரடியாகச் சிகிச்சை அளிக்க வேண்டும் என்றால் கவச உடைகள் அணிய வேண்டும்.

ஒரு கவச உடை நான்கு மணி நேரம் தான் தாக்குப் பிடிக்கும்.

டாக்டர், நர்ஸ் மற்றும் சுகாதார பணியாளர் ஆகியோருக்கு கவச உடைக்கு மட்டும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் செலவிட வேண்டும்.

நாம் சொல்லும் கணக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கு.

அரசுகள் ,நோயாளிகளிடம் பணம் வசூலிப்பது இல்லை. இலவசமாகவே சிகிச்சை அளிக்கிறது.

தனியார் மருத்துவமனையில் கொரோனா நோயாளி ஒருவர் சிகிச்சை பெற வேண்டுமானால் குறைந்த பட்சம் 15 லட்சம் ரூபாயில் இருந்து 20 லட்சம் ரூபாய் வரை தனது பாக்கெட்டில் இருந்து எடுக்க  வேண்டும்.

– ஏழுமலை வெங்கடேசன்