செல் வளர்ச்சிதை மாற்றத்தில் மனிதர்களிடம் இருந்து பெறப்படும் ஸ்டெம் செல்களை எப்படி முப்பரிமண முறையில் உருவாக்கப்பட்ட கல்லீரல்களை உருவாக்க முடியும் என்பதற்கான முதற்கட்ட ஆய்வு வெற்றியடைந்துள்ளது.

ஆய்வகத்தில் உருவாக்கப்படும் கல்லீரலானது சாதாரண ஆய்வுகளுக்கு மட்டும் பயன்படாமல் கல்லீரலில் கொழுப்பு எப்படி படிகிறது என்பதையும் கொடுக்கப்படும் மருந்துகளால் ஏற்படும் மாற்றங்களையும் கண்டறியமுடியும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்

பிட்ஸ்பர்க் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மனிதனின் சாதாரண சரும செல்களை வேதிவினை யாத்தின் வழியாக  SIRT1  என்ற ஜீனாக மாற்றி பின் அவற்றினை ஸ்டெம் செல் நிலைக்கு மாற்றி பின்னர் அவற்றினை கல்லீரல் செல்களாக மாற்றுகின்றனர் அதன் பின் அவற்றினை எலியின் கல்லீரலில் உள்ள செல்களுக்க பதிலாக செயற்கையாக உருவாக்கப்பட்ட கல்லீரல் செல்களை வைத்து செயல்படும் கல்லீரலாக மாற்றியுள்ளனர்

முதற்கட்டமாக இது எலிகளுக்கு மட்டுமே சோதனை செய்யப்பட உள்ளது

  • செல்வமுரளி