பப்பாளி லெமன் ஜூஸ் செய்வது எப்படி

 

     தேவையான பொருட்கள்:

 1. கனிந்த பப்பாளி – 200 கிராம்
 2. தேன் – 1 டேபிள் ஸ்பூன்
 3. எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்
 4.  ஐஸ் தண்ணீர் – தேவையான அளவு

  செய்முறை: 

  * பப்பாளி பழத்தை தோல் எடுத்து துண்டுகளாக நறுக்கிகொள்ளவும்.

  * மிக்ஸியில் பப்பாளி துண்டுகள், எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

  * பிறகு அதில் ஐஸ் தண்ணீர் மற்றும் தேன் கலந்து மீண்டும் ஒருமுறை அடித்து டம்ளரில் ஊற்றி பரிமாறினால் பப்பாளி லெமன் ஜூஸ் தயார்!

  * வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையும் இந்த பப்பாளி லெமன் ஜூஸ்.

வைட்டமின் ஏ,வைட்டமின் சி அதிக அளவில் பப்பாளியில் இருப்பதால் கண்ணுக்கு நல்லது. மற்றும் தோல் சம்பந்தமான பிரச்னைகளுக்கு ஏற்றது. இதில்  இருக்கும்  நார்சத்தானது மனித உடலில் செரிமானத்தை சீரக்கி, மலச்சிக்கல் வராமல் தடுக்க உதவுகிறது.

Leave a Reply

Your email address will not be published.