‘ஏசி’ உபயோகப்படுத்துவதால் மின்சார கட்டணம் அதிகரிப்பா? வல்லுநர்கள் என்ன சொல்கிறார்கள்….

ஏசி எனப்படும் குளிர்சாதன இயந்திரம்  உபயோகப்படுத்துவதால் மின் கட்டணம் அதிகரித்து வருவ தாக பொதுமக்களிடையே ஒரு கருத்து நிலவி வருகிறது. ஆனால், ஏசி இயந்திரத்தை சரியான முறையில் உபயோகப்படுத்தாதலாயே மின்சார செலவு அதிகரிப்பதாக வல்லுநர்கள் கூறி உள்ள னர்.

நாட்டில் நிலவி வரும் கடும் வெப்பம் காரணமாக பெரும்பாலானவர்களின் வீடுகளில் ஏசி எனப் படும் குளிர்சாதன இயந்திரமும் இன்றைய சூழ்நிலையில்  அத்தியாயவசமாகி உள்ளது. உயர்தர வகுப்பினர், நடுத்தர வகுப்பினர் மட்டுமின்றி அடித்தட்டு மக்களும் இன்று ஏசி உபயோகிப்பது சர்வ சாதாரணமாகி உள்ளது.

ஏசியை போட்டுக்கொண்டு ஹாயா இருக்கும் மக்கள், இரண்டு மாதம் கழித்து வந்திருக்கும் மின் கட்டணத்தை பார்கும்போது….. அது நமது பிரஷரை எகிற வைக்கிறது. அதுவும் தமிழகம் போன்ற மாநிலங்களில் 2 மாதத்திற்கு ஒருமுறை மின்சார அளவீடு கணக்கிடுவதால், ஏசி உபயோகப் படுத்தும் ஒவ்வொருவரும் மின் கட்ணத்தை கண்டு அதிர்ச்சி அடைகிறார்கள்… தமிழக அரசின் மின்கட்டண பட்டியல் இதற்கு மற்றொரு காரணம்.

இதுபோன்ற காலக்கட்டங்களில்  நாம் உபயோகித்து வரும் ஏசி இயந்திரங்களை எந்த டெம்ப்ரேச்ச ரில் உபயோகப்படுத்தினால் மின்சார சிக்கனம், மின் கட்டண உயர்வில் இருந்தும் தப்பிக்கலாம் என்பது குறித்து விளக்குவதே இந்த கட்டுரை.

கோடையில் வெப்பத்தின் தாக்கத்தினால் நாம் உபயோகப்படுத்தும் ஏசியால்  எகிறும் மின்சா ரத்தையும், மின் கட்டணத்தையும் கட்டுப்படுத்த அரசு மற்றும் மின் சாதன தயாரிப்பாளர்கள், மின்சாதன வல்லுநர்கள் கூறும்  ஆலோசனைகளை பின்பற்றி பாருங்களேன்…

பொதுவாக கோடை காலத்தில் ஏசியின் பயன்பாடு அதிகம் இருக்கும். அதற்கேற்றார் போல  ஏசி பொருத்தப்பட்டுள்ள அறையில் சூரிய ஒளி புகாதவாறு அடர்த்தியான திரைச்சீலைகளோ அல்லது கட்டிட சுவர்கள் ஈரப்பத காற்றை உள்வாங்காதவாறு,  பால் சீலிங்கோ செய்யப்பட வேண்டும். அதே வேளையில்  தேவையற்ற பொருட்களை ஏசி அறையில் வைப்பதைத் தவிர்க்க வேண்டும் ஜன் னல், கதவுகளில் ஏதேனும் இடைவெளியோ, துளைகளோ இல்லாதவாறு கவனித்துக் கொள் ளுங்கள். இதன் காரணமாக அறையினுள் ஏசியில் இருந்து வெளியாகும் குளிர்காற்று அறையை விட்டு வெளியேறாதவாறு தடுக்கப்படும். இதன் காரணமாக ஏசியின் உபயோகமும் குறையும்.

பொதுவாக நாம் ஏசி அறைக்குள் சென்றவுடன் ஏசியின் டெம்ப்ரேச்சரை 18 டிகிரிக்கு மாற்றுவது வழக்கம். ஆனால், இதன் காரணமாக மின்சார செயல்பாடுதான் அதிகரிக்குமே ஒழிய வேறு எந்த பயனும் இல்லை என்று  ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஏசியில் உள்ள டெம்பரேச்சரை 18 டிகிரி அளவில்  குறைத்து அதிக குளிர்ச்சியில் வைப்பதன் மூலம், அறையில் போதுமான அளவு குளிர் பரவியவுடன் அதில் அமைக்கப்பட்டுள்ள தெர்மா ஸ்டார்ட் செயல்பட்டு கம்ப்ரஷரின் செயல்பாட்டினை கட்டுப்படுத்தும். சிறிது நேரத்தில் அறையில் வெப்பநிலை மாறுபடுவது காரணமாக மீண்டும் கம்ப்ரஷரை தெர்மோஸ்டார்ட் இயக்கும். இவ்வாறு அடிக்கடி கம்ப்ரஷயர் இயக்கப்படுவதால் மின்சார தேவை அதிகரிக்கும் என்றும், கம்ப்ரஷரின் வாழ்நாளும் குறைந்துவிடுவதாக  ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அதே வேளையில் அறையில் ஏசியின் டெம்ப்ரேச்சரை 24 டிகிரியில் வைத்து உபயோகப்பத்தி னாலே நல்லது என்றும், அதில் இருந்து கிடைக்கும் குளிர்காற்று  நமது உடல்நிலைக்கு போது மானது, இதன் காரணமாக மின்சார சேமிப்பும் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

ஏசியின் டெம்ப்ரேச்சரை 24 டிகிரி வைத்து தொடர்ந்து உபயோகப்படுத்தினால், நமது  நமது மின்சார கட்டணம் 30 சதவிகிதம் வரை குறையும் என்றும் ஆய்வுகள் நிரூபித்துள்ளன.

ஏசி போன்ற ஆடம்பர பொருட்களினால் நாட்டில் மின்சார தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது குறித்து மத்திய அரசு கவலைகொண்டுள்ளது. மின்சார தேவையை குறைக்கும் வகை யில்,  மத்தியஅரசு சமீபத்தில் ஆலோசனை நடத்தியது.

கடந்த 24ந்தேதி  மத்திய எரிசக்தி துறை அமைச்சர் ஆர்.கே.சிங் ஏசி இயந்திர உற்பத்தியாளர்களு டன் ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய அமைச்சர், ஏசி தயாரிப்பாளர்களிடம் 24 டிகிரி செல்சியஸ் முதல் 26 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பநிலையை கொண்ட ஏசி இயந்திரங்களை உருவாக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

ஏசி இயந்திரத்தின் வெப்பநிலையை ஒவ்வொரு டிகிரி செல்சியஸ் அளவுக்கு உயர்த்தும் போதும், 6 சதவிகிதம்  மின்சாரத்தை சேமிக்க முடியும் என்ற அமைச்சர், இதன் காரணமாக  மின்சாரம் வீணக்கப்படுவது தடுக்கப்படுகிறது, மேலும் ஏசியின் குளிர் நிலை 24 டிகிரி செல்சியஸ் என்றள வில் வைப்பதால் சுற்றுச்சூழலையும் பாதிக்காமல் பார்த்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.

இனி வரும் காலங்களில்  ஏசி தாயாரிப்பாளர்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் ஏசி இயந்திரங்களில் இயல்பான  குளிர்நிலை 24 டிகிரி செல்சியஸ் என்பதை குறிப்பிட வேண்டும் என்றும், அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்றும்  அறிவுறுத்தினார். அதுதொடர்பான கொள்கை முடிவை அடுத்த 6 மாதத்திற்குள்  நடைமுறைப்படுத்த  மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் . 1990 ஆம் ஆண்டுக்குப் பிறகு குளிர்சாதன வசதிக்காக இந்தியர்கள் பயன்படுத்தும் மின்சாரத்தின் அளவு 15 மடங்கு அதிகரித்துள்ளது. மத்திய அரசின் திட்டம் அமலுக்கு வரும் நிலையில், ஆண்டுக்கு 2,000 கோடி யூனிட் மின்சாரத்தை சேமிக்க முடியும் என அமைச்சர் நம்பிக்கை  தெரிவித்துள்ளார்.

மேலும், வணிக வளாகங்கள்  தாங்கள் உபயோகப்படுத்தி வரம் ஏசி இயந்திரங்களின் டெம்ப்ரேச்சர் களை இயல்பாக (Default)  24 டிகிரி வைத்தே உபயோகப்படுத்துங்கள் என்றும், இதன் காரணமாக 20 பில்லியன் யூனிட் மின்சாரம் சேமிக்கப்படும் என்றும் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து  டெரி(எரிசக்தி மற்றும் மேலாண்மை நிறுவனம்) நிறுவன இயக்குனர் அஜய் மாத்தூர் என்ன கூறுகிறார்…….

பொதுவாக ஒரு அறையில் உபயோகிக்கப்படும் ஏசியின் டெம்ப்ரேச்சர் அறைக்கு வெளியே நிலவும் வெப்பநிலையை பொறுத்து மாறுபடுகறது. அதன் காரணமாக மாநிலத்திற்கு மாநிலம் ஏசி உபயோகிப்பதில் வித்தியாசம் ஏற்படுகிறது. நாம் ஏசியின் டெம்ப்ரேச்சரை சரியாக உபயோகப் படுத்தினால் மட்டுமே, ஏசியில் உபயோகப்படும் கம்ப்ரஷரின் வாழ்நாளும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

24 டிகிரியில் வைத்து ஏசி உபயோகப்படுத்துவதால், கம்ப்ரஷரின் வேலை மிகவும் குறையும் என்றும் இதன் காரணமாக பவர் சேமிப்பு ஏற்படும். அறையில் தேவையான குளிர்நிலை ஏற்பட்ட வுடன், ஏசியின் கம்ப்ரஷர் ஆப் ஆகி, ஏசியில் அமைக்கப்பட்டுள்ள பேன் செயல்படும், இதன் காரண மாக பவர் சேமிப்பு ஏற்படுகிறது. நமது உடல் தேவைக்கு 24 டிகிரி செல்சியஸ் டெம்ப்ரேச்சரே போதுமானது என்று மாத்தூர் கூறி உள்ளார்.

அதுபோல, டெல்லியில் உள்ள ஒரு  டெக்னிக்கல் தொழில் தொழில் நுட்ப நிபுணரும், இந்தியாவின் முதல் டெரி கிரிகா என்ற பசுமை இல்லத்தை சேர்ந்த  ரேசாந்தா கே. ராய், ரோய் என்ற தொழில் நுட்ப வல்லுனர்  கூறுகையில், ஏசியின் டெம்ப்ரேச்சரை 27 டிகிரி முதல் 29 டிகிரி  வரை வைத்து உபயோகிக்கலாம். இதன் காரணமாக ஒவ்வொரு முறையும்  ரூ.3 ஆயிரம் அளவில் மின்சார கட்டணம் சேமிக்க முடியும் என்று கூறி உள்ளார். இதை தான்  குர்கானில் உள்ள தனது குடியிருப் பில்,  உபயோகப்படுத்தி பார்ப்பததாகவும், இதன் காரணமாக  மின் சேமிப்பு கிடைத்ததாகவும் தெரிவித்து உள்ளார்.

அவரது கருத்தை  வரவேற்பது போலவே ஜிபிசி எனப்படும் கிரின் பிஸினஸ் சர்டிபிகேக் இன்ஸ்டி டியூட்  துணைத்தலைவர்  மிலி மஜும்தாரும் கருத்து தெரிவித்து உள்ளார். ஏசியை  29 டிகிரி டெம்ப்ரேச்சர் வைத்து உபயோகப்படுத்துவதே சிறந்தது என்றும் அதுவே  நமது உடலுக்கு போது மானது என்று கூறி உள்ளார்.

“ஏசி வெப்பநிலையில் ஒவ்வொரு டிகிரி அதிகரிக்கும் போது 3 முதல் 5% மின்சாரத்தை சேமிக்க முடியும்,” என்று மஜும்தார் கூறினார். ஏசியின் டெம்ப்ரேச்சரை 18டிகிரிக்கு பதிலாக 27 டிகிரி வைத்தால், 8 மாதத்தில் 960 கிவோ மின்சாரம் சேமிக்க முடியும் என்றும் தெரிவித்து உள்ளார்.

ஏசியில் மின்சார சேமிப்பு என்று ஸ்டார் ரேட்டிங் போட்டிருப்பது மின்சேமிப்பு என்பது கண்துடைப்பு என்றும், மின் உபயோகம் அறையின் வெப்பநிலை மற்றும், அறைக்கு வெளியே நிலவும் வெப்பநிலையை சார்ந்தது என்று கூறப்படுகிறது. மேலும் அறையினுள் ஏசி பயன்பாட்டின் நேரம், அறைகளின் அளவு, அறையில் உள்ள மக்களின் எண்ணிக்கை போன்ற பலவற்றைப் பொறுத்து தான் என்றும் அஜய் மாத்தூர் தெரிவித்து உள்ளர்.

அறையின் ஏசியை 18 டிகிரியில் வைத்துக்கொண்டு நீங்கள் போர்த்திக்கொண்டு தூங்குவதால் எந்த பயனும் இல்லை.. அது ஆரோக்கியமற்றது மட்டுமல்லாமல் உடலுக்கு கேடானது என்றும் மாத்தூர் தெரிவித்து உள்ளார்.

பொதுவான மனித உடலின் வெப்பநிலை 36 முதல் 37 டிகிரி அளவிலேயே இருக்கும். நாம் ஏசியின் டெம்ப்ரேச்சரை மாற்றி மாற்றி உபயோகப்படுத்துவதால், வெப்பநிலை மாற்றம் காரணமாக  நமது உடல்நிலைதான் பாதிப்பதாகவும் ஆய்வுகள் தெரிவித்து உள்ளன.

எனவே, ஏசியின் டெம்ப்ரேச்சரை ஒரே நிலையில் வைப்பதன் மூலம் மின்சார சேமிப்பு மட்டுமின்றி உடல்நலத்தையும் சேமிக்கலாம்.