இன்ஸ்டாக்ராம் ஸ்டோரீஸ்- டெஸ்க்டாப்பில் பார்ப்பது எப்படி?

இன்ஸ்டாக்ராம்

நீங்கள் இன்ஸ்டாக்ராம் பயனாளாராக இருந்தால், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்டோரீஸ் வசதி பற்றி தெரிந்து வைத்திருப்பீர்கள்.
1instagre1
சமூகவலைதள சந்தையில் ஸ்நாப்சாட்டின் எழுச்சியை முறியடிக்க இன்ஸ்டாக்ராம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய வசதிதான் இந்த ஸ்டோரீஸ். இதில் பகிரப்படும் படங்களும் காணொளிகளும் 24 மணி நேரத்தில் தானாக மறைந்துவிடும்.
மொபைலில் இன்ஸ்டாக்ராம் பயன்படுத்துவோர் இந்த புதிய வசதியை பார்த்திருப்பீர்கள். ஆனால் நீங்கள் இன்ஸ்டாக்ராமை டெஸ்க்டாப்பில் பயன்படுத்துபவராக இருந்தால் இந்த வசதி இன்னும் அங்கு இடம்பெறவில்லை.
நீங்கள் கூகிஸ் க்ரோம் பயனாளராக டெஸ்க்டாப்பிலும் இந்த வசதியைப் பெற ஒரு ஐஜி ஸ்டோரி என்ற ஒரு எக்ஸ்டென்ஷனை நிறுவினாலே போதும். அதை எப்படி நிறுவுவது என்ற விளக்கம் கீழே:1instagre
1. கூகிள் க்ரோம் ஐஜி ஸ்டோரி என்ற எக்ஸ்டென்ஷனை க்ரோம் வெப்ஸ்டோரில் தேடுங்கள். கண்டடைந்தவுடன் ‘Add to Chrome’ என்ற பொத்தானை க்ளிக் செய்து எக்ஸ்டென்ஷனை நிறுவிக்கொள்ளுங்கள்.
2. நிறுவிய பின்னர் மற்ற எக்ஸ்டென்ஷன்களின் ஐகான்களுடன் கூகிள் க்ரோம் ஐஜி ஸ்டோரியின் ஐகானும் இடம்பெற்றிருப்பதை நீங்கள் காணமுடியும்.
3. ஐஜி ஸ்டோரி உங்கள் டெஸ்க்டாப்பில் நிறுவப்பட்டதை உறுதிசெய்துகொள்ள இன்ஸ்டாகிராம்.காம் தளத்துக்கு சென்று உங்கள் ப்ரொஃபைலை பரிசோதித்துப் பாருங்கள். அங்கே இஸ்டாக்ராம் ஸ்டோரீஸ் இடம்பெற்றிருப்பதை உங்களால் காணமுடியும்.
4. அம்புக்குறி பொத்தான்களைப் பயன்படுத்து நீங்கள் முன்னும் பின்னும் உலவமுடியும். எஸ்கேப் பொத்தானை அழுத்துவத்ன் மூலம் நீங்கள் கேலரியை மூடமுடியும். இஸ்டாக்ராம் பயனாளரின் ஐகானை வலது க்ளிக் செய்வதன்மூலம் அவர்களது ஸ்டோரிக்களைப் பதிவிறக்கம் செய்துகொள்ளவும் முடியும்
இந்த என்ஸ்டென்ஷன் முற்றிலும் இலவசம்.

கார்ட்டூன் கேலரி