லட்சுமி குபேர வழிபாடு செய்வது எப்படி?

லட்சுமி குபேர வழிபாடு செய்வது எப்படி?

லட்சுமி குபேர வழிபடு குறித்து நெட்டிசன் மூகாம்பாள் பாஸ்கர் ஜெயராமன் அவர்களின் முகநூல் பதிவு

வீட்டில் குபேரன் புகைப்படம் வாங்கி பூஜையறையில் வைத்துக் கொள்ளவும்.

தினமும் 27 முறை காயத்ரி மந்திரம் ஜபிக்கவும்.பின்னர் குபேரன் தியான சுலோகம் சொல்லி மந்திர ஜபம் செய்யவும்.

லட்சுமி குபேர வழிபாட்டால் திடீர் பணவரவு,வீடு,வாகனங்கள் உண்டாகும்.தன லாபம் உண்டாகும்.மிகவும் உயர்ந்த நிலைக்கு வருவது நிச்சயம்.

1) தொழில் சம்பந்தப்பட்ட கொடுக்கல், வாங்கலில் பிரச்சினை இருப்போரும், தொழில் தொடங்குவோரும் குபேரனிடம் வந்து சிறந்த முறையில் லட்டு நிவேதனம்,பிரார்த்தனை,அர்ச்சனை செய்து கொள்ள வேண்டும்.

2)  பூச நட்சத்திரமும் வியாழக்கிழமையும் சேரும் நாட்களில் அபிஷேக ஆராதனைகள் பூரணமாகச் செய்து சுவர்ணார்ச்சனை 108,1008,10,008 கணக்கில் செய்து வரலாம்.

3) செல்வ நிலை தாழாமலிருக்கவும், திடீர் தனவரவுக்கும் பவுர்ணமி தினத்தில் குபேரனுக்கு மூலமந்திர அர்ச்சனை செய்து வழிபடலாம்.

4) வணிகம் நன்றாக விருத்தி அடையவேண்டும் என்றால் வெள்ளிக்கிழமைகளில் நல்ல நேரத்தில் குபேரனுக்குப் பால் அபிஷேகம் செய்து, சிவப்பு மலர்களால் குபேரனை அலங்காரம் செய்து வழிபட வேண்டும்.

மேலும் உடனடியாக பிரார்த்தனை நிறைவேற நெய் தீபம் ஏற்றி வரலாம்.