யந்திரங்கள் உருவாகும் விதம்….

ஸ்ரீ மஹா யோகினி பீடம்,மன்னார்குடி ஸ்ரீலஸ்ரீ அருள்மொழி அம்மையார் இணையப் பதிவு

மந்திர ஒலிகள் உருவாக்கும் யந்திரங்கள்:

சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த டாக்டர் ஹான்ஸ் ஜென்னி ஒலி அலை பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டார். ஒவ்வொரு ஒலி அலையையும் இவர் கவனித்து ஆராய்ந்தார். கிளிசெரின்,பாதரசம்,ஜெல் பவுடர்,இரும்பு போன்ற பொருள்களில் ஒலி அலைகள் என்ன விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்பதை ஆராய்ந்து அவற்றை குறிப்பெடுத்தார்.

குறைவான அதிர்வுள்ள ஒலி அலைகள் ஜியாமெட்ரி வரைபடங்களை உருவாக்குவதைக் கண்டு அதிசயித்தார்.ஒலி அதிர்வு அதிகமாக்கப்பட்ட போது சிக்கலான படங்கள் உருவாக ஆரம்பித்தன. இதைத் தொடர்ந்து ஹிந்து மதம் சித்தரிக்கும் யந்திரங்கள் மேல் இவர் கவனம் திரும்பியது.

மந்திரங்களும் யந்திரங்களும்:  வேதம் கூறும் மந்திரங்கள் ஒவ்வொன்றிற்கும் ஒரு சக்தி உண்டு.இதே போல ஒவ்வொரு யந்திரமும் ஒரு வித ஜியாமெட்ரி உருவமாக அமைக்கப்படுவதோடு, குறிப்பிட்ட யந்திரத்தைப் பிரதிஷ்டை செய்ய, குறிப்பிட்ட மந்திரம் உச்சரிக்கப்பட்டு சக்தி ஊட்டப்படுகிறது.

ஹான்ஸ் ஜென்னி குறிப்பிட்ட மந்திரம் ஒன்றை உச்சரிக்கச் செய்த போது, குறிப்பிட்ட யந்திரத்தின் உருவம் வந்ததைப் பார்த்துப் பிரமித்துப் போனார்.    ஓம் எனும் மந்திரமும் ஸ்ரீ யந்திர அமைப்பும்: தலையாய மந்திரமான “ஓம்” என்பதை உச்சரிக்கச் செய்தார். ‘ஓ’ என்ற வார்த்தை உச்சரித்தவுடன் ஒரு முழு வட்டம் தோன்றியது. ‘ம்’ என்று முடிக்கும் போது சிக்கலான ஸ்ரீ யந்திரம் உருவானது.

நவீன உடலியல் இரசாயன வல்லுநர்கள்,வானியல்-இயற்பியல் விஞ்ஞானிகள் மற்றும் ஹிந்து யோகிகள் நம்முடைய உடல்கள் அணுத்துகள் அதிர்வுகளின் அமைப்புகளே (system of vibration) என்று ஒரு மனதாக ஒப்புக் கொண்டுள்ளனர். நம்முடைய உடலின் ஒவ்வொரு அங்கமும் ஒவ்வொரு திசுவும் உறுப்பும் வெவ்வேறு அதிர்வெண்களுக்குத் தக்கபடி இயங்குகிறது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஸ்வரத்தைக் கொண்டுள்ளது.

இதைச் சுருக்கமாகச் சொல்லப் போனால் நம்முடைய உடலே,ஒலி அலைகளால் உருவாக்கப்பட்டுள்ளது என்று ஆகிறது.