டில்லி,
ங்கிகளில் இருந்து வேண்டிய அளவு பணம் எடுக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது. ஏற்கனவே பணம் எடுக்க இருந்த உச்சவரம்பு தளர்த்தப்பட்டு உள்ளது.
ஆனால், மக்களின் தேவைக்கேற்க பணம் வங்கிகளில் இருப்பது இல்லை என்பதே உண்மை.
கடந்த 8ந்தேதி பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று மோடி அறிவித்ததை தொடர்ந்து, வங்கிகளில் இருந்து பணம் எடுப்பதற்கு மத்திய அரசு உச்சவரம்பை அறிவித்தது.

அதன்படி ஒருவாரத்துக்கு அதிகபட்சமாக ரூ.24 ஆயிரம் வரை எடுக்க அனுமதிக்கப்பட்டது. அதுவும் முதலில் நான்காயிரம் என்றும், பின்னர் இரண்டாயிரம் என்றும் பிரித்து பிரித்து எடுக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அன்றாட செலவுக்கே பணம் இல்லாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக பல இடங்களில் போராட்டமும் நடைபெற்றது.
புதிய ரூபாய் நோட்டுக்கள் சரிவர புழக்கத்திற்கு வராததால் பணத்தட்டுபாடு நிலவியது.
இந்தியாவில் உள்ள அனைத்து கட்சிகளுமே, மத்திய அரசின் இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து, மத்தியஅமைச்சரவை  தீவிரமாக ஆலோசனை நடத்தியது. நாட்டில் பணப்புழக்கத்தை அதிகரிப்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. அதைத்தொடர்ந்து , பணம் எடுப்பதற்கான ரூ.24 ஆயிரம் உச்ச வரம்பை விலக்க முடிவு செய்யப்பட்டது.
அந்த முடிவை ரிசர்வ் வங்கி  அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.
rbi1
இன்று முதல் வாடிக்கையாளர்கள் தங்கள் தேவைக்கு ஏற்ப பணம் எடுத்துக் கொள்ள அனுமதிக்கும்படி பொதுத் துறை வங்கிகள், தனியார் வங்கிகள், வெளிநாட்டு வங்கிகள், மண்டல ஊரக வங்கிகள், நகர கூட்டுறவு வங்கிகள், மாநில கூட்டுறவு வங்கிகள், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் ஆகியவற்றுக்கு ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
பணம் எடுப்பதற்கான உச்சவரம்பு கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளதால் இன்று முதல் வங்கிகளில் இருந்து வாடிக்கையாளர்கள் கூடுதல் பணம் பெற வழி ஏற்பட்டுள்ளது. .
ஆனால் பெரும்பாலான வங்கிகளில் இன்று பணம் எடுப்பதற்கான உச்ச வரம்பு தளர்வு கடை பிடிக்கப்படவில்லை. ஏற்கனவே பணம் தட்டுப்பாடாக இருப்பதால் இன்றும், குறிப்பிட்ட தொகைக்கு மேல் பணம் கொடுக்க இயலாமல் வங்கிகள் திணறியபடி உள்ளன.
ஏற்கனவே ரூ.2000, 4000 என்று இருந்தபோதே மக்கள் தேவைக்கு பணம் கொடுக்க முடியாமல் வங்கிகள் திணறின.
தற்போது பணம் எடுக்கும் உச்சவரம்பு தளர்த்தப்பட்டுள்ளதால், அதற்கு தேவையான பணத்திற்கு வங்கிகள் என்ன செய்யப்போகிறது என்பது கேள்விக்குறியே….?
ஏ.டி.எம். கூட்டம்
இதுகுறித்து பொதுத்துறை வங்கி மானேஜர் ஒருவர் கூறியதாவது:
மத்திய அரசின் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கதுதான். ஆனால், வாடிக்கையாளர்களுக்கு தேவைக்கேற்ப கொடுக்க பணம் எங்கே உள்ளது என்று கேள்வி எழுப்பினார். நாங்கள் கேட்கும் அளவுக்கு பணத்தை ரிசர்வ் வங்கி தருவதில்லை.
இந்த நிலையில் மத்திய அரசின் அறிவிப்பால் வாடிக்கையாளர்களுக்கும், எங்களும் இடையே மேதல்தான் ஏற்படும்.  மேலும் நாளை முதல் மாத சம்பளம் வாங்குபவர்களும், அரசு ஊழியர்களும் பணம் எடுக்க அதிக அளவில் வங்கிக்கு வருவார்கள். அவர்களுக்கு கொடுக்க தேவையான பணத்திற்கு எங்கே போவது… எனவே பணம் வழங்குவதில் சிரமம் ஏற்படும்” என்றார்.