தன்னை அறைந்த பெண் எம் எல் ஏ வை திருப்பி அறைந்த பெண் போலீஸ்

சிம்லா

காங்கிரஸ் எம் எல் ஏ ஒருவர் பெண் போலிசை கன்னத்தில் அறைய அந்தப் பெண் போலீஸ் திரும்பி அறைந்துள்ளார்.

சமீபத்தில் நடந்த இமாசலப் பிரதேச தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்து பாஜக ஆட்சியைக் கைப்பற்றி உள்ளது.  இந்த தோல்வி குறித்து ஒரு ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.   இதில் ராகுல் காந்தி கலந்துக் கொண்டுள்ளார்.

ராகுல் காந்தியின் வருகையை ஒட்டி அந்த இடத்தின் வாயிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டிருந்தது.   அந்தக் கூட்டத்துக்கு காங்கிரசை சேர்ந்த பெண் எம் எல் ஏ வான ஆஷா குமாரி தாமதமாக வந்தார்.   அவரை உள்ளே அனுமதிக்க அங்கிருந்த பெண் காவலர் மறுத்துள்ளார்.

அதனால் இருவருக்கும் வாக்குவாதம் முற்றிப் போய் ஆஷா குமார் அந்த பெண் காவலரை கன்னத்தில் ஓங்கி அறைந்துள்ளார்.  இதைத் தொடர்ந்து அந்த பெண் காவலரும் எம் எல் ஏ வை திருப்பி கன்னத்தில் ஓங்கி அறைந்துள்ளார்.  பிறகு அங்கிருந்தோர் இருவரையும் சமாதானப் படுத்தி உள்ளனர்.