சென்னை:

மிழகம் முழுவதும் பேனர் வைக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், பாஜக தேசிய செயலாளர் பங்கேற்ற விழாவுக்காக சாலையோரங்களிலும், நகர் பகுதிகளிலும் ஏராளமான பேனர்கள் விதிகள் மீறி வைக்கப்பட்டிருந்தன.

இந்த பேனர்களை அகற்றுவது குறித்து காவல்துறையினரோ, சம்பந்தப்பட்ட அரசுத்துறை அதிகாரி களோ கண்டுகொள்ளாமல் இருந்தால், பொதுமக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பேனர் வைக்க எச்.ராஜாவுக்கு மட்டும் விதிவிலக்கா என்று நெட்டிசன்களும் கொந்தளித்து வருகின்றனர்.

எச்.ராஜாவை வரவேற்று வைக்கப்பட்டுள்ள பேனர்கள்

சென்னையில் அதிமுகவினர் வைத்த பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ பலியான நிகழ்வு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கி உள்ள நிலையில், சென்னை உயர்நீதிமன்றமும் சாட்டையை சுழற்றியது. அதைத்தொடர்ந்து ஆங்காங்கே உள்ள பேனர்களை அதிகாரிகள் அகற்றி வருகின்றனர்.

அதைத்தொடர்ந்து, திமுக, அதிமுக போன்ற அரசியல் கட்சிகள், திரையுலக நட்சத்திரங்கள் பேனர் வைக்க தங்களது கட்சித் தொண்டர்களுக்கு தடை விதித்துள்ள உள்ளன.

இந்த நிலையில், குமரி மாவட்டத்தில் பாஜக விழாவில் கலந்துகொள்ளச் சென்ற எச்.ராஜாவை வரவேற்று சாலையோரங்களில் ஏராளமான பேனர்கள் விதிகளை மீறி வைக்கப்பட்டிருந்து. நாகர்கோவை அடுத்த மார்த்தாண்டம் அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்க சென்ற   எச்.ராஜாவை வரவேற்ற , வழிநெடுகிலும் ஏராளமான பேனர்களை  அனுமதியின்றி பாஜகவினர்  வைத்துள்ளனர்.

இந்த பேனர்களை அகற்ற அப்பகுதி போலீசார் நடவடிக்கை எடுக்காதது பெரும் அதிருப்தியை அப்பகுதி மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.  இது தொடர்பாக சமூக ஆர்வலர்கள் அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டியும் அரசு அதிகாரிகளும், காவல்துறையினரும் கண்டுகொள்ளாமல் இருந்தது மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.