டில்லி

யர்கல்வி நிறுவன சமூக வலை தள கணக்குடன் மாணவர்களின் கணக்கை இணைக்க தேவை இல்லை என மனித வள அமைச்சகம் அறிவித்துள்ளது.

மாணவர்களில் பலர் தற்போது சமூக வலை தளங்களான முகநூல், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்றவைகளில் மிகவும் ஆர்வத்துடன் இயங்கி வருகின்றனர். இந்த வலை தளங்களில் தங்கள் சொந்த விவரங்கள் மட்டுமின்றி தங்களுக்கு தோன்றும் பல கருத்துக்களையும் வெளியிட்டு வருகின்றனர். உன்னைப் பற்றி தெரிந்துக் கொள்ள உன் நண்பனை தெரிந்துக் கொண்டால் போதும் என முன்பு சொல்வதற்கு பதில் சமூக தள கணக்கை பார்த்தாலே முழு விவரம் தெரியும் காலம் இது.

சமீபத்தில் மனித வள அமைச்சகம் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் ஒரு கடிதம் அனுப்பி இருந்தது. அதில், “அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் தங்களது ஆசிரியர் அல்லது ஆசிரியர் அல்லாத ஒருவரை சமூக வலை தள வல்லுனராக தேர்வு சேய்ய வேண்டும். அவ்வாறு தேர்வு செய்பவர் அந்த கல்வி நிறுவனத்தின் சார்பில் அனத்து சமூக வலைதளங்களிலும் கணக்குகளை தொடங்கி நிர்வகிக்க வேண்டும்.

ஒவ்வொரு கல்லூரி அல்லது பல்கலைக்கழக சமூக வலை தல கணக்குகளும் இந்த உயர்கல்வி நிறுவன கணக்குடன் இணைக்கபட்ட வேண்டும். அத்துடன் இவை யாவும் ஒருங்கிணைந்து மனித வள அமைச்சக கணக்குடன் இணைய வேண்டும். மூன்றாவதாக இந்த சமூக வலை தள வல்லுனர்கள் இந்த நிறுவனம் அல்லது கல்லூரியில் உள்ள அனைத்து மாணவர்களின் சமூக தள கணக்குகளை இணைக்க வேண்டும்.

இறுதியாக சமூக தள வல்லுனர்கள் தங்கள் உயர்கல்வி நிறுவனம் குறித்த அனைத்து விவரங்களையும் தன் கீழ் உள்ள கணக்குகளில் அகிர வேண்டும். இதற்கான காலக் கெடு அனைத்து உயர் கல்வி நிறுவனங்களுக்கும் இந்த மாதம் 31 வரை அளிக்கப்படுகிறது. இந்த விவரங்களை விரைவில் அமைச்சகத்துக்கு அளிக்க வேண்டும்” என குறிப்பிடபட்டிருந்தது.

இது மாணவர்களிடையே மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தங்களை கண்காணிக்கும் செயல் என பலரும் கருத்து தெரிவித்தனர். இதையொட்டி செய்தி ஊடகமான ‘தி குவிண்ட்’ மனித வள அமைச்சகத்தை ஒரு சில கேள்விகளுடன் அணுகி உள்ளது.

அதற்கு மனித வள அமைச்சகம் அளித்த பதிலில், “நல்ல பழக்கங்களை பரப்பி மாணவர்களை ஊக்குவிக்க இந்த ந்டவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.  ஆனால் இது மாணவர்களுக்கு கட்டாயம் இல்லை. அவர்களுக்கு தங்கள் சமூக தள கணக்கு விவரங்களை அளிக்க விரும்பவில்லை எனில் தர வேண்டாம்.

இந்த திட்டமானது முழுக்க முழுக்க நற்செய்திகளை பகிர மட்டுமே உருவாக்கப்பட உள்ளது. இவ்வாறு பகிர்வதன் மூலம் எந்த ஒரு கணக்கையும் கண்காணிக்க முடியாது. இந்த திட்டம் அடிப்படை அறிவை வளர்க்க மட்டுமே உருவாக்கப்பட உள்ளது.” என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

THANKS  : THE QUINT