நொறுக்குத் தீனிக்கு கல்லூரிகளில் ‘நோ’ சொல்லும் மத்திய அரசு

டில்லி

ல்லூரி வளாகங்களில் பிட்சா, பர்கர் போன்ற நொறுக்குத் தீனிகளை விற்க மத்திய மனித வளத் துறை அமைச்சகம் தடை விதித்துளது.

தமிழகத்தில் சமீபத்தில் கல்லூரி மாணவர்கள் வளாகத்துக்குள் மொபைல் உபயோகிப்பதை தடை செய்தது   எப்போதும் மொபைலும் கையுமாகவே திரியும் பல மாணவர்களுக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  தற்போது மத்திய மனித வளத்துறி அமைச்சகம் மாணவர்களுக்கு மற்றுமொரு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

அந்த அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”பிட்சா, பர்கர் உள்ளிட்ட பல நொறுக்குத் தீனிகளை கல்லூரி வளாகத்தினுள் விற்க தடை செய்யப்பட்டுள்ளது.   இத்தகைய உணவு வகைகளை சாப்பிடுவதன் மூலம் மாணவ மாணவிகளின் ஆரோக்யம் பெருதும் பாதிப்பு அடைகிறது.   இந்த நொறுக்கு தீனிகள்  உடல் எடையை அபரிமிதமாக கூட்டவும் பல்வேறு நோய்களை உண்டாக்கவும்  செய்கிறது.” என குறிப்பிட்பட்டுள்ளது

கார்ட்டூன் கேலரி