ஐஐடி மாணவர்கள் பாதியில் படிப்பை விட்டாலும் கல்வி உதவித்தொகை முழுவதையும் திரும்பக் கொடுக்க வேண்டும்

IITஐ.ஐ.டி.களில் தரமான ஆராய்ச்சியை ஊக்குவிக்கவும் மாணவர்கள் உயர் கல்வியைத் தேர்ந்தெடுக்க உறுதி செய்யும் விதமாகவும், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம், பிரதமரின் ஆராய்ச்சிக்கான உதவித்தொகையின் கீழ், மாதத்திற்கு ரூ.75,000 உதவித்தொகையைப் பெற வாய்ப்பு உள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

மாணவர்களுக்கு இந்த நன்மையைச் செய்யும் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம், ஒரு உட்கூற்றையும் இதன் கீழ் சேர்த்துள்ளது. அந்த உட்கூற்றின் படி, ஐ.ஐ.டி.களில் இளங்கலைப் பட்டம் படித்து முடித்து நேரடியாக இளநிலைப் பட்டப் படிப்பிற்கான உதவித்தொகை வழங்கப்பட்டுள்ள மாணவர்கள், பாதியில் படிப்பை விட்டுச் சென்றாலும் உதவித்தொகையை முழுவதுமாகத் திரும்ப கொடுக்க வேண்டும்.

அமைச்சரவையிலிருந்து அனுமதி வந்தபிறகு, இத்திட்டம் தொடங்கப்படும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
தற்போது, ஐ.ஐ.டி.களில், வெவ்வேறு இளநிலைப் பாடத்திட்டங்களில் 25,000 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.

இதுபற்றி ஒரு மூத்த மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஐ.ஐ.டி.களில் ஆராய்ச்சியின் தரம் பிஎச்.டி பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள மாணவர்களின் தரத்தை பொறுத்தது. இந்தத் தரத்தை மேம்படுத்த, இளங்கலைப் படிப்பில் நன்மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை பிஎச்.டி படிப்பிற்காகப் பதிவு செய்ய ஊக்கவிப்பது மிகவும் அவசியம். ஆனால் அதே நேரத்தில், மாணவர்கள் ஒரு வேலை கிடைத்தப் பின்னர் படிப்பை விட்டு விடக் கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதற்காக நாங்கள் பணத்தை திரும்பக் கொடுக்க வேண்டும் என்று ஒரு உட்கூறை நுழைக்க முடிவு செய்துள்ளோம்”. தற்போது, மாணவர்கள் தங்கள் முதுகலைப் பட்டம் முடித்தபிறகு இளநிலைப் படிப்பைத் தேர்ந்தெடுத்து மாதத்திற்கு ரூ.25,000 ஊக்கத்தொகைப் பெறுகின்றனர்.

பிரதமர் கொடுக்கும் உதவித்தொகை அளவு கணிசமாக உயர்ந்துள்ளதால், தேர்தெடுக்கும் நடைமுறை மிகவும் கடுமையான இருக்க வாய்ப்பு உள்ளது.
இத்திட்டம் இந்தக் கல்வி ஆண்டிலிருந்து தொடங்கவுள்ளது. ஆரம்பத்தில் 1,000 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

“ஒரு வேளை, மாணவர் அவரது இளநிலைப் படிப்பை முடிப்பதற்கு முன் படிப்பை விட்டு வெளியேச் சென்றால், அதுவரை அவருக்குக் கொடுக்கப்பட்ட உதவித்தொகை முழுவதையும் அவர் திரும்பச் செலுத்த வேண்டும்,” என்று ஒரு மூத்த அதிகாரி கூறினார்.

இளநிலைப் படிப்பிற்கான ஊக்கத்தொகை ஐந்து ஆண்டுகளுக்கு வழங்கப்படும். “உதவித்தொகை வழங்கப்படும் மாணவர்கள் அவர்கள் இளநிலைப் படிப்பின் ஒரு பகுதியாக எடுக்க விரும்பும் ஆராய்ச்சி திட்டம்பற்றி ஒரு மேலோட்டமான அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும். இது ஒவ்வொரு ஐஐடி ஆளுநர் சபை (BOG) குழுமூலம் ஆராயந்து முடிவு அறிவிக்கப்படும், ” என்று ஒரு அதிகாரி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.