வேத பாடங்களை பள்ளிக் கல்வி முறையாக்க அரசு உத்தேசம்

டில்லி

ழக்கமான பள்ளிக் கல்வியைப் போல வேத பாடங்களுக்கும் 10 ஆவது, 12 ஆவது என்னும் கல்வி முறையாக்க மத்திய அரசு உத்தேசித்துள்ளது.

பண்டைய காலங்களில் வேதம் படிப்போர் குருகுல வாசம் செய்து பாடங்களை படித்து வந்துள்ளனர்.   தற்போது சில மடங்கள் வேத பாடசாலைகள் அமைத்து மாணவர்களுக்கு வேதங்களை பயிற்றுவிக்கின்றன.   ஆனால் அவை முறையான கல்வி முறையின் கீழ் வருவதில்லை.   முறையான கல்வி முறையானது 10 ஆவது மற்றும் 12 ஆவது என உள்ளது.

வேத பாடசாலைகளில் முதன்மையாக உஜ்ஜையினி நகரில் உள்ள மகரிஷி சந்திபானி ராஷ்டிரிய வேத வித்யா ப்ரடிஷ்ஸ்தான் உள்ளது.  அந்த ப்ரடிஷ்ஸ்தானத்தை  தன்னுரிமை கல்வி நிலையமாக மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத்துறை அங்கீகரித்துள்ளது.    அந்த பாடசாலை தற்போது அரசுக்கு ஒரு யோசனையாக வேத பாடசாலைகளிலும் 10ஆம் வகுப்பு (வேத பூஷன்) மற்றும் 12ஆம் வகுப்பு (வேத விபூஷன்) ஆகிய தேர்வுகளை நடத்த வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்த வேண்டுகோள் பரிசோதனையில் உள்ளதாகவும் இதன் சாத்தியக் கூறு குறித்து சிபிஎஸ்ஈ ஆலோசித்து வருவதாகவும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.    சிபிஎஸ்ஈ இது குறித்து தனது கருத்தை தெரிவித்த பிறகு அமைச்சகம் முடிவை அறிவிக்க உள்ளது.

முந்தைய உத்திரப் பிரதேச மாநில ஆட்சியில் மதரசா பள்ளிகளுக்கு இவ்வாறு பாடக் கல்வி முறையை அறிமுகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.