Random image

மணிப்பூர் பல்கலை துணை வேந்தர் விவகாரம் : ஜனாதிபதி தலையிடுவாரா?

டில்லி

ணிப்பூர் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆத்ய பிரசாத் பாண்டே விடுமுறை விவகாரம் குறித்து ஜனாதிபதிக்கு மனிதவள மேலாண்மை அமைச்சகம் ஜனாதிபதிக்கு தகவல் அளித்துள்ளது.

மணிப்பூர் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவியில் உள்ள ஆத்ய பிரசாத் பாண்டே மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டுள்ளன.   இவருக்கு எதிராக பல்கலைக்கழக ஊழியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் கடந்த மே மாதம் 30 ஆம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.   இந்த போராட்டம் இரண்டரை மாதம்  நடந்தது.

அதன்பிறகு போராட்டம் செய்தவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்திய அரசின் மனித வளத்துறை அமைச்சகம் துணை வேந்தர் பாண்டே மீது விசாரணை நடத்த ஒப்புக் கொண்டது.  அதை ஒட்டி  கடந்த ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தேதி  மூடப்பட்டிருந்த பல்கலைக்கழகம் திறக்கப்படது.    அத்துடன் விசாரணை முடியும் வரை பாண்டேவை நீண்ட விடுமுறையில் செல்ல மத்திய அரசின் மனிதவளத்துறை அமைச்சகமும் முதல்வரும் உத்தரவிட்டனர்.

ஆனால் பாண்டே பணிக்கு வந்தது மட்டுமின்றி ஆசிரியர் சங்கத்தையும் ஊழியர் சங்கத்தையும் தடை செய்துள்ளார்.  அத்துடன் மாணவர்களை  போராட்டத்துக்கு தூண்டியதாக சங்கங்கள் மீது குற்றம் சாட்டி உள்ளார்.  சங்கங்கள் அவர் எடுக்கும் முடிவு செல்லாது எனவும், அவர் மீண்டும் பணியில் தொடர்ந்தால் போராட்டம் மறுபடி தொடங்கும் என எச்சரித்துள்ளன.

இந்நிலையில் துணை வேந்தர் ஆத்ய பிரசாத் பாண்டே குறித்து மனிதவள அமைச்சகம் ஜனாதிபதிக்கு புகார் அளித்துள்ளது.   இந்த விவகாரத்தில் தலையிட்டு துணை வேந்தரை உடனடியாக நீண்ட விடுமுறையில் செல்ல உத்தரவிட வேண்டும் என  அமைச்சகம் ஜனாதிபதியை கேட்டுக் கொண்டுள்ளது.   அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களும் ஜனாதிபதியின் ஆளுகைக்கு உட்பட்டது என்பதால் ஜனாதிபதி இந்த விவகாரத்தில் தலையிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.