Random image

உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்: 10 மீ ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவிற்கு மேலும் 2 தங்கம்

உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் ஹிரிரே ஹசாரிகா தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். 10 மீ ஏர் ரைபிள் பிரிவில் 250.1 புள்ளிகளில் முதலிடம் பிடித்து இந்திய வீரர் தங்கம் வென்றார்.

hriday

உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டிகள் தென்கொரியாவின் சாங்வான் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய இளம் வீரர்கள் தங்கம் வென்று அசத்தி வருகின்றனர். அந்த வகையில் இன்று நடைபெற்ற 10 மீட்டர் ஏர் ரையிள் துப்பாக்கி சுடுதல் பிரிவில் இந்திய வீரர் ஹரிடே ஹசாரியா 250.1 புள்ளிகளில் முதலிடம் பிடித்து தங்கம் வென்றுள்ளார். இதேபோல் ஈரான் வீரர் அமிர் முகமதுவும் 250.1 புள்ளிகளில் முதலிடம் பிடித்தார். இருவரில் ஒருவரை தேர்வு செய்வதற்காக ஹூட் ஆப் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் ஹசாரிகா 10.3 புள்ளிகளும், அமிர் 10.2 புள்ளிகளும் பெற்றனர்.

இதையடுத்து, ஹசாரிகா 0.1 புள்ளி வித்யாசத்தில் ஈரான் வீரரை பின்னுக்கு தள்ளி தங்கம் வென்றார். ஈரான் வீரர் அமிர் முகமது வெள்ளிப்பதக்கம் வென்றார். இவர்களை தொடர்ந்து 228.6 புள்ளிகள் எடுத்த ரஷ்ய வீரர் கிரியோகி வெண்கலப்பதக்கம் பெற்றார்.

womens

இதேபோன்று ஜூனியர் மகளிர் அணிக்கான 10மீ ஏர் ரைபிள் சுடுதல் போட்டியில், இந்தியாவின் இளவேனில், ஷ்ரேயா மற்றும் மனினி 1880.7 புள்ளிகளில் முதலிடம் பெற்று தங்கம் வென்றனர். இதில் இளவேனில் வளரிவன் 631 புள்ளிகளும், ஷ்ரேயா அகர்வாக் 628.5 புள்ளிகளும், மனினி கௌஷிக் 621.2 புள்ளிகளும் எடுத்து சாதனை படைத்தனர்.