ராஷ்மிகாவின் நடனத்திற்கு வாழ்த்து சொன்ன ஹ்ரித்திக் ரோஷன்…!

வெங்கி குடுமுலா இயக்கத்தில் நிதின், ராஷ்மிகா மந்தனா, ஆனந்த் நாக், வெண்ணிலா கிஷோர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘பீஷ்மா’.

இந்தப் படத்தின் பாடல் காட்சி ஒன்று, இந்தி ‘வார்’ படம் படமாக்கப்பட்ட இடத்தில் காட்சிப்படுத்தியுள்ளார்கள்.

ஷூட்டிங் இடைவேளையில் அந்த இடத்தில் நிதின் மற்றும் ராஷ்மிகா ‘வார்’ படத்தின் ‘குன்கூரோ’ பாடலுக்கு ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் வாணி கபூர் மாதிரியே நடனமாடி ட்விட்டரில் பகிர்ந்தனர்.

இந்த வீடியோவை பார்த்த ஹ்ரித்திக் ரோஷன், “அருமை. ராஷ்மிகா மற்றும் நிதின். பீஷ்மா படத்துக்கு என் வாழ்த்துகள்” என தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்தார்.

இதற்கு ராஷ்மிகா “உங்களுடைய வாழ்த்துக்கு மிக்க நன்றி. உங்களை ஒரு நாள் சந்தித்து, இந்த நடன அமைப்பை உங்களுடன் ஆட காத்திருக்கிறேன் சார்” என்று பதிலளித்துள்ளார்.