கொரோனா அச்சத்தினால் பிள்ளைகளுக்காக ஒன்றிணைந்த விவாகரத்தான ஹ்ரித்திக் ரோஷன் – சுஸான் ஜோடி…!

2000-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட ஹ்ரித்திக் ரோஷனும் – சுஸான் கானும் 2013-ம் ஆண்டு விவாகரத்துக்கு விண்ணப்பித்து 2014-ம் அண்டு விவாகரத்து பெற்றனர். இவர்களுக்கு ஹ்ரீஹான், ஹ்ரிதான் என்ற இரு மகன்கள் உள்ளனர்.

நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. இதுவரை இந்தியாவில் 664 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு 12-ஐத் தொட்டிருக்கிறது. கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தேசிய ஊரடங்கு அடுத்த 3 வாரங்களுக்கு அமலில் இருப்பதால், தங்கள் மகன்களை இணைந்து பார்த்துக் கொள்ள, சுஸான் தனது வீட்டிலிருந்து ஹ்ரித்திக்கின் வீட்டில் தற்காலிகமாகத் தங்கியுள்ளார்.தற்காலிகமாக ஒரே வீட்டில் வாழ்கின்றனர்.