கார்த்தியின் ’கைதி’ இந்தி ரீமேக்கில் ஹ்ரித்திக் ரோஷன்….?

தீபாவளி முன்னிட்டு ‘பிகில்’ படத்துக்குப் போட்டியாக வெளியான படம் ‘கைதி’. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி, நரேன், ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பலர் நடிப்பில் இப்படம் உருவானது.

விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படத்தின் இந்தி ரீமேக் உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது.ஆனால், தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவோ தங்களுடைய நிறுவனமே அனைத்து மொழிகளிலும் தயாரிக்கவுள்ளதாக அறிவித்தது. முதலில் இந்தி மொழி ரீமேக்கை அறிவித்துள்ளது படக்குழு.

ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ட்ரீம் வாரியர் நிறுவனம் இந்திப் பட தயாரிப்பில் களமிறங்குகிறது.

இப்படத்தில் ஹ்ரித்திக் ரோஷன் நடிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது . அவரிடம் பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளது படக்குழு.மேலும் இப்படத்தை இயக்க போவது யார் எனும் கேள்விக்கும் விரைவில் விடை கிடைக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது .