ஹுவாய் (Huawei) நிறுவனத்தின் புதிய இயங்குதளம், சாதக பாதகங்கள்

மெரிக்க- சீன வர்த்தகப்போரில் அதிகமாக மிக அதிகமாக உச்சரிக்கப்பட்ட பெயரும், அதிகமாக பாதிக்கப்பட்டதும் ஹுவாய் ((Huawei) .

அமெரிக்க-சீன வர்த்தக சந்தையின் மிக அதிகமாக விவாதிக்கப்படுவது தற்போது ஹுவாய் நிறுவனம்தான். ஹுவாய் (Huawei) நிறுவனமும் தன் இயங்குதளத்தினை புதிதாக வெளியிட உள்ளதாக கூற இப்போது தொழில்நுட்ப உலகில் பரவலான பேச்சு ஹாங்மெங்தான்

உலகின் 42% செல்போன் சந்தையை சீன நிறுவனங்கள் கைப்பற்றியுள்ளன. நோக்கியா நிறுவனம் என்று ஆன்டிராய்டு இயங்குதளங்தை பயன்படுத்த தயங்கியதோ  அன்றே அதன் சந்தையும் கீழ்நோக்கி பயணிக்க ஆரம்பித்தது ஆன்டிராய்டு இயங்குதளம்தான் செல்போன் சந்தையை கையகப்படுத்தி நோக்கியாவை போட்டியிலேயே இல்லாமல் பின்லாந்து போய் பிறகு மைக்ரோ சாப்ட் இடம் போய் இப்போது திரும்ப ஆன்டிராய்டு போன்களோடு சந்தையில் வந்துள்ளது.  ஆன்டிராய்டை பயன்படுத்தாமல் போன பிளாக்பெரி போனும் தன் சந்தையை வெகுவாக இழந்திருக்கிறது

அந்த அளவு சந்தையை வைத்திருக்கும் ஆன்டிராய்டு இயங்குதளத்திற்கு போட்டியாக ஹுவாய் (Huawei)  நிறுவனம் தன்னுடைய இயங்குதளத்தினை பிப்ரிவரி 2019ல் கொண்டுவர உள்ளது. அதற்கான ஆயத்தப்பணிகள் நடைபெற்று வருகின்றன

இன்றோ அமெரிக்க -சீன வர்த்தகப்போரில்,  உலகில் 19% சத செல்போன்களை விற்பனை செய்திருக்கும் ஹுவாய் (Huawei) நிறுவனத்தினை  தடை செய்துவிட்டாலும் பிற நாடுகள் இன்னமும் பயன்படுத்திக்கொண்டுதான் இருக்கின்றன . அது மட்டுமல்ல உலக அளவில் சீன செல்போன் நிறுவனங்கள்  42% சந்தையை  தங்கள் வசம் வைத்துள்ளன என்பதை கட்டுரையின் முதல் பாராவிலே கொடுத்திருக்கின்றோம்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஹுவாய் நிறுவனத்தின் புதிய இயங்குதளத்திற்கு ஹாங்மெங் ஓஎஸ் ( சீன சந்தைக்கு), ஆர்க் ஓஎஸ் (உலக சந்தைக்கு) என்று காப்புரிமை வாங்கியுள்ளது ஹுவாய் நிறுவனம்.

இப்போதைய போட்டியில் ஆன்டிராய்டு சந்தையை பிடிக்குமா? ஹாங்கமெங் சந்தையை பிடிக்குமா என்றால் ஹாங்மெங் இயங்குதளம்  சந்தையை பிடிக்க பெரும் வாய்ப்புகள் உள்ளன என்பவற்றை யாரும் மறுக்கமுடியாது

ஏனெனில் ஹுவாய் (Huawei)  நிறுவனத்தின் புதிய இயங்குதளமும் ஆன்டிராய்டுதான். ஆன்டிராய்டு கட்டற்ற மென்பொருள் என்பதால் டொனால்ட் டிரம்ப் உட்பட யாரும் ஆன்டிராய்டின் மேல் கட்டு போட முடியாது.

எனவே கட்டற்ற மென்பொருள் உரிமம் மூலமாக ஆன்டிராய்டு இயங்குதளத்தினை எடுத்து தனக்கு ஏற்றார்ப்போல் மாற்றம் செய்துகொள்ள முடியும்.  ஆன்டிராய்டில் இயங்கும் எல்லா செயலியும் ஹாங்மெங்கிலும் இயங்கும். இவ்வாறு மாற்றம் செய்த  இயங்குதளத்தினைக்கொண்டு தனக்கான செயலி சந்தை மென்பொருளைக்கொண்டு களமிறங்க உள்ளது ஹுவாய் (Huawei)  நிறுவனம்

இப்படி தங்களுடைய இயங்கு தளத்தினை கொண்டு வந்தால் செல்போன் சந்தையை முந்தி விடலாமா?

வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. சீனாவில் உள்ள எல்லா செல்போன் உற்பத்தி நிறுவனங்களும் ஹுவாய் இயங்குதளத்தினை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டால் உலகம் முழுதும் உள்ள தானாகவே ஹுவாய் நிறுவனத்தின் இயங்குதளம் பிரபலமாகிவிடும்

குறிப்பு அமெரிக்க செல்போன் நிறுவனங்கள் குறைந்த பட்சம் 399 டாலருக்குதான் செல்போன் களையே வழங்குகின்றன. ஆனால் அதே வசதியுள்ள சொல்லப்போனால் அதை விட அதிக வசதியுள்ள செல்போன்களை சீன நிறுவனங்கள் வெறும் 200 டாலருக்கு விற்பனை செய்கின்றன என்றால் நீங்களே யூகிக்கலாம்

என்ன ஒரு சிக்கல் எனில் கூகிள் யூடியூப், பிளே ஸ்டோர், கூகிள் மேப் போன்றவற்றை வாங்கவே செயலியில் நிறுவிட இயலாது. ஏன் பேஸ்புக் கூட அவர்களின் செயலியில் இருக்குமா என்று சொல்ல முடியாது. ஆனால் இதையெல்லாம் எதிர்பார்த்துத்தான் கூகிள் என்னவோ தனது புதிய இயங்குதளத்தினை உருவாக்கிவருகிறது.

குறிப்பு செய்தி:

ஹுவாய் (Huawei)  நிறுவனம் என்னவோ அமெரிக்காவை உளவு பார்க்கிறது என்று தடை போட்டது அமெரிக்கா. ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக ஜெர்மன் அதிபரின் செல்போனை அமெரிக்கா வேவு பார்ப்பதாக அமெரிக்காவின்  US National Security Agency (NSA) மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்காக இருக்கிறது

-செல்வமுரளி

Leave a Reply

Your email address will not be published.