கண்ணூர்,

கேரளாவில் உள்ள பாரதியஜனதா தலைமை அலுவலகத்தில் பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இது கேரள மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

கேரளவில் சமீபகாலமாக அரசியல் படுகொலைகள் அதிகரித்து வருகிறது. கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் பா.ஜ.க மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இடையே அடிக்கடி மோதல் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக கொலைகளும் நடந்துள்ளன.

இதற்கிடையில் கடந்த வாரம் பாஜ தேசிய தலைவர்  அமித்ஷா கலந்துகொண்ட இரண்டு நாள் அரசியல் நடைபயணமும் நடைபெற்றது. அப்போது  பா.ஜ.க. தொண்டர்களை இடதுசாரிகள் தாக்குவதாக பேசி பரபரப்பை ஏற்படுத்தினார் அமித்ஷா.

அதைத்தொடந்து கண்ணூர் மாவட்டத்தில் பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை கண்டித்து பானூர் பகுதி மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினரும்  கண்டன பேரணி நடத்தினர்.

அப்போது திடீரென ஒரு கும்பல் பேரணியில் வந்தவர்கள் மீது வெடிகுண்டு வீசியது. இதில் போலீசார் உள்பட 18 பேர் பலத்த காயமடைந்தனர்.

இதன் காரணமாக மீண்டும் இரு கட்சிகளுக்கு இடையே மோதல் நடைபெறுமோ என்ற அச்சம் கேரள மக்களிடையே எழுந்திருந்தது.

இதையடுத்து இன்று பாஜக மாவட்ட அலுவலகத்தில் இன்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அலுவலகத்துக்குள் ஏராளமான இரும்பு குண்டுகள், கத்திகள், அரிவாள்கள், உடைவாள்கள் போன்ற ஏராளமான பயங்கர ஆயுதங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை கைப்பற்றிய போலீசார் அதுகுறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

பாஜ அலுவலகத்தில் பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.