வேலூர் அருகே தனியாருக்கு சொந்தமான சிமென்ட் குடவுனில் இருந்து ரூ.9 கோடி பறிமுதல்…..(வீடியோக்கள்)

வேலூர்:

வேலூர் அருகே தனியாருக்கு சொந்தமான சிமென்ட் குடவுனில் இருந்து ரூ.9 கோடி அளவிலான பணத்தை வருமானவரித்துறையினர் கைப்பற்றி உள்ளனர். இந்த பணம் வாக்காளர்களுக்கு கொடுக்க வைக்கப்பட்டிருந்தது என்பது தெரிய வந்துள்ளது. பணத்தை பதுக்கியது யார் என்பத  குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு வேலூரில் உள்ள திமுக பொருளாளர் துரைமுருகன் வீடு உள்பட பல இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில்,  வேலூர் பள்ளிக்குப்பம் பகுதியில் 10 கோடி ரூபாயை ஒரு பழைய  சிமெண்ட் குடோனில் வருமானவரிதுறையினர் நடத்திய சோதனையில் ரூ.9 கோடி மதிபிலான பணம் கட்டுக்கட்டாக கைப்பற்றப்பட்டு உள்ளது.

இந்த பணங்கள் அனைத்தும் பழைய கோனிப்பைகள், அரிசிப்பைகள், அட்டை பெட்டிகள், சூட்கேஸில் வைக்கப்பட்டு, சிமென்ட் குடோனில் ஒரு ஓரத்தில் யாருக்கும் தெரியாதவாறு பதுக்கி வைக்கப்பட்டுள்ளது.

மூட்டைகளை பிரித்து பார்த்த வருமானவரித்துறையினர், அதனுள் கட்டுக்கட்டாக பணம் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அந்த மூட்டைகளில், ஒவ்வொரு வார்டு வாரியாக வாக்காளர் பேரை எழுதி கவர்ல பணத்தை போட்டு ரெடி பண்ணி வைக்கப்பட்டிருந்ததும் தெரிய வந்துள்ளது.

இதை  கைப்பற்றியுள்ள வருமான வரித்துறையினர், இந்த பணம் யாருடையது, எந்த கட்சிக்காரர் கள் வாக்காளர்களுக்கு கொடுக்க கவர் போட்டு வைத்துள்ளார்கள் என்பத குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சிமென்ட் குடவுன்  அந்த பகுதியை திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு சொந்தமானது என்று தகவல் பரவி வருகிறது. ஒரே இடத்தில் 9 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ள பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.