இடைத்தேர்தல் எதிரொலி: டாஸ்மாக் முன்பு குவிந்த மது பிரியர்கள்

திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தல் காரணமாக டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால், சிவகங்கையில் மது வாங்க கூட்டம் அலைமோதுகிறது.

மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி உட்பட தமிழகத்தின் 4 தொகுதிகளில் இடைத்தேர்தல்கள் இன்று நடந்து வருகின்றன. இதனால் திருப்பரங்குன்றம் தொகுதியில் காலை முதல் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. கடையடைப்பு காரணமாக அண்டை மாவட்டமான சிவங்கங்கை மாவட்டத்திற்கு படையெடுத்துள்ள மது பிரியர்கள், புலியூரில் உள்ள டாஸ்மாக் கடை முன்பு குவிந்துள்ளனர்.

மது வாங்குவதில் மது பிரியர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், காவல்துறையினர் அங்கு வந்து லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதனால் மது பிரியர்கள் பலர் ஏமாற்றமடைந்தனர்.

கார்ட்டூன் கேலரி