செங்கல்பட்டு அருகே தனியார் நிறுவனத்தில் தீ விபத்து

செங்கல்பட்டு அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டதால், பரபரப்பான சூழல் அப்பகுதியில் நிலவி வருகிறது.

செங்கல்பட்டு அருகே உள்ள மறைமலை நகர் பகுதியில் அமைந்திருக்கும் தனியார் நிறுவனம் ஒன்றில், இரவு 9 மணிக்கு மேல் திடீரென பயங்கர சத்தத்துடன் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்டது தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த சிலர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்ததோடு, தீயை அணைக்கவும் முற்பட்டுள்ளனர். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் 5க்கும் மேற்பட்ட வாகனங்களுடன் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்ந்து தீயை அணைக்கும் பணி நடந்து வரும் நிலையில், நிறுவனத்தின் சேத விபரங்கள் ஏதும் இதுவரை வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.