Random image

பாகிஸ்தான் ராணுவத் தலைவரை கட்டி அணைத்தது ரபேல் ஒப்பந்தமில்லை : சித்து

ண்டிகர்

முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்து பாகிஸ்தான் தலைவரை கட்டி அணைத்ததற்கு கண்டனம் தெரிவித்த பாஜகவினருக்கு பதில் அளித்துள்ளார்.

முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் பதவி எற்பு நிகழ்வுக்கு தனது கிரிக்கெட் சகாக்களுக்கு அழைப்பு விடுத்தார்.  ஆனால் அந்த விழாவுக்கு நவ்ஜோத் சிங் சித்துவைத் தவிர வேறு யாரும் செல்லவில்லை.   பஞ்சாப்  மாநில காங்கிராச் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான சித்து அந்த விழாவில் பாகிஸ்தான் ராணுவ தலைவரை கட்டி தழுவினார்.

இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.   சித்துவை பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங் கண்டித்தார்.   மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சித்து பாகிஸ்தான் ராணுவ வீரரை கட்டி அணைத்தது இந்திய ராணுவத்தினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியதாக தெரிவித்தார்.  அத்துடன் சிரோமணி அகாலி தள தலைவர் உள்ளிட்ட பலரும் சித்துவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இது குறித்து இன்று நவ்ஜோத் சிங் சித்து செய்தியாளர்களிடம், “நீங்கள் எப்படி வேண்டுமானாலும் இந்த விவகாரத்தை கிளப்ப்புங்கள்.   ஆனால் அது வெறும் கட்ட்டி அணைப்பு தானே தவிர ரபேல் ஒப்பந்தமும் இல்லை.  சிக்கியர்களை சுடுவதும் இள்ளை.   சீக்கியர்களின் உணர்வை மதிக்காத நீங்கள் அந்த ஒரு நொடி கட்டி அணைத்ததை ஊதி பெரிதாக்குவது சரியா?

பாகிஸ்தான் மற்றும் இந்தியாவுக்கு இடையே கிரிக்கெட் போட்டி நடைபெறும் போது கைக்லுக்குவதில்லையா?  இந்நள்  பாகிஸ்தான் பிரதமர் முன்பு கிரிக்கெட் போட்டிக்காக இங்கு விளையாடிய போது இந்திய வீரர்களுடன் கை குலுக்கி உள்ளார்.   ஒரு வேளை அவர் கோலியை கட்டிப்பிடித்தால் அவர் முகத்தை திருப்பிக் கொண்டு போவாரா? ” என காட்டமாக பேசி உள்ளார்.