பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ஃபெராரியின் நிறுவனர் என்ஸோ பெராரியின் வாழ்க்கை ‘ஃபெராரி’ என்ற பெயரில் திரைப்படமாக உருவாகவுள்ளது.

ப்ராக் யேட்ஸ் என்பவர் எழுதிய ‘என்ஸோ ஃப்ராரி – தி மேன் அன்ட் தி மெஷின்’ என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் இப்படத்தை மைக்கேல் மேன் இயக்கவுள்ளார்.

இப்படத்தின் கதையை ‘இடாலியன் ஜாப்’ படத்தின் கதையை எழுதிய ட்ராய் கென்னடி மார்ட்டின் எழுதுகிறார். இப்படத்தை எஸ்டிஎக்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்துக்கான ஒளிபரப்பு உரிமையை அமேசான் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இதில் நாயகனாக நடிக்க ஹ்யூ ஜாக்மேனிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.