கொரோனா வைரஸ் பரவல் – தனது தயாரிப்புகளின் விலையைக் குறைத்த இந்துஸ்தான் யுனிலீவர்!

மும்பை: கொரோனா தொற்று இந்தியாவில் தீவிரமடைந்துவரும் நிலையில், இந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனம், தனது தயாரிப்பு பொருட்களான லைஃப்பாய் சானிடைசர்கள், லைஃப்பாய் திரவ கை சுத்திகரிப்பான்கள் மற்றும் டோமெக்ஸ் தரை சுத்திகரிப்பான்கள் ஆகியவற்றின் விலைகளை 15% வரை குறைத்து அறிவித்துள்ளது.

மேலும், சமூத்தில் தேவைப்படும் பிரிவினருக்கு, சுமார் 2 கோடி லைஃப்பாய் சோப்புக் கட்டிகளை நன்கொடையாக வழங்கவும் இந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது என்று கூறப்படுகிறது.

மேலும், விலைக் குறைத்து அறிவிக்கப்பட்ட தயாரிப்புகளின் உற்பத்தி விரைவில் துவங்கப்படும் என்றும், அடுத்த சில வாரங்களில் அவை சந்தையில் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இதுபோன்ற நெருக்கடியான சூழல்களில், பெரிய நிறுவனங்கள் மிக முக்கியப் பங்கை ஆற்ற வேண்டிய அவசியமிருப்பதால், எச்யுஎல் நிறுவனம், அரசு மற்றும் தனது பங்குதாரர்களுடன் இணைந்து தேவையானப் பணிகளைத் தொடங்கியிருப்பதாக அந்நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.