அமெரிக்கா கனடா எல்லை: ஜாடிக்குள் அடைத்து மனித மூளை கடத்தல்……

வாஷிங்டன்:

மெரிக்காவில் மனிதமூளை ஒன்று ஜாடிக்குள் வைக்கப்பட்டுகடத்தப்பட்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்கா கனடா பார்டலில் நடைபெற்ற வாகன சோதனையின்போது இது கண்டுபிடிக்கப்பட்டது. இது மூளையற்றவர்களின் செயல் என்று விமர்சிக்கப்படுகிறது.

அமெரிக்காவின் மிச்சிகன் மற்றும் கனடாவின் ஒண்டாரியோ மாகாணங்களுக்கு இடைப்பட்ட பகுதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்காவின் சுங்கம் மற்றும் எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, கனடாவிலிருந்து அமெரிக்கா விற்கு வந்த சரக்கு வாகனத்தை சோதனையிட்ட அதிகாரிகள், அதில், ஜாடி ஒன்றினுள் மனித மூளை அடைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர்.

கனடாவிலிருந்து ஆவணப்படுத்தப்படாத மூளையை யாரோ அமெரிக்காவிற்கு அனுப்ப முயன்றதாகவும், ஆனால் அந்த உறுப்பு இலக்கை அடைவதற்கு முன்பு மிச்சிகன் எல்லையில்  தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளதாகவும், கப்பல் மூலம் எடுத்துச்செல்லப்பட இருந்த “பழங்கால கற்பித்தல் மாதிரி” என்று பெயரிடப்பட்ட பெட்டக்த்தினுள் ஒரு  மேசன் ஜாடிக்குள் மூளை கண்டுபிடிக்கப்பட்டது என்று அமெரிக்க சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

“இது போன்ற ஏற்றுமதிகளை இறக்குமதி செய்ய விரும்பும் நபர்கள், நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களில் கடுமையான இறக்குமதி அனுமதி திட்டம் உள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும், இது கடைபிடிக்கப்பட வேண்டும்” என்று துறைமுக இயக்குனர் மைக்கேல் ஃபாக்ஸ் கூறினார்.‘

ஏற்கனவே இதுபோல கடந்த 2014ஆம் ஆண்டில், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலல்சிலிருந்து கலிஃபோர்னியாவுக்கு கொண்டு செல்லப்பட்ட 67  ராட்சச ஆப்பிரிக்க நத்தைகள் கைப்பற்றப்பட்டது. அதபோல, .2006ம் ஆண்டில் அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் டைனோசர் முட்டைகள் உட்பட எட்டு டன் கொண்ட வரலாற்றுக் காலத்துக்கு முந்தைய புதைபடிவங்கள் கைப்பற்றப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.