ஜல்லிக்கட்டு வேண்டி மாணவர்கள் மனித சங்கிலி போராட்டம்

ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இது குறித்து அவசர சட்டம் கொண்டுவர வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தி தமிழகம் எங்கும் போராட்டங்கள் நடந்துவருகின்றன.

இந்த போராட்டங்களில் மாணவர்களும் தங்களை ஈடுபடுத்திக்கொண்டுள்ளனர். இந்நிலையில், சென்னை காமராஜர் சாலை களங்கரை விளக்கம் பகுதியில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு கல்லூரி மாணவர்களின் மனித சங்கலி போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்த போராட்டம் குறித்து நேற்றிலிருந்து வாட்ஸ்அப்,பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதளங்கிலன் மூலம் தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. இதையடுத்து பொதுமக்கள் பலரும் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டிருக்கிறார்கள்.  , தமிழர்களின் கலாச்சார உடையான வேட்டியை சிறுவர்கள் அணிந்து இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.