கடலூர்,

காவிரியின் கிளை ஆறான கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்டவேண்டி மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்டப்படும் என மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். அதையடுத்து அதற்காக ரூ.400 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டது.

ஆனால், நிதி ஒதுக்கி 3 ஆண்டுகள் கழித்தும், இதுவரை எந்தவிதமான பணிகளும் தொடங்க வில்லை.

இதை கண்டித்து,  கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயில் மா.ஆதனூரில் இருந்து நாகை மாவட்டம் குமாரமங்களம் வரை உள்ள கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் கொள்ளிடம் ஆற்றில் இறங்கி மனித சங்கிலி போராட்டம் நடத்தி தங்களது எதிர்ப்பை அரசுக்கு தெரிவித்தனர்.

அணை கட்டுவது சம்பந்தமாக உரிய அறிவிப்பை இம்மாதம் 28ந் தேதிக்குள் பொதுப்பணி துறை அறிவிப்பு செய்யாவிட்டால் இம்மாதம் 30-ந் தேதி நாகை மற்றும் கடலூர் மாவட்ட சட்ட மன்ற உறுப்பினர்கள் அலுவலகத்தை முற்றுகையிட போவதாகவும் அப்பகுதி மக்கள் மற்றும் விவசாய சங்கத்தினர் அறிவித்து உள்ளனர்.

அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரவில்,  தண்ணீரி சேமிக்கும் விதமாக ஆற்றின் குறுக்கே பல தடுப்பணைகள் கட்டிவரும் நிலையில், தமிழகத்தில் தடுப்பணை கட்ட நிதி ஒதுக்கியும் 3 ஆண்டுகளாக கண்டுகொள்ள அதிகாரிகள் மற்றும் ஆட்சியாளர்கள் கிடப்பில் போட்டிருப்பது அந்த பகுதி மக்களுக்கு, அரசு மீது கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.