இளங்கலை கல்வியுடன் 1,000 மணி நேரம் தொழில் பயிற்சி….மத்திய அரசு

டில்லி:

நாட்டில் உள்ள கல்வி முறை தான் வேலையில்லா திண்டாட்டத்துக்கு காரணம் என்ற விமர்சனம் எழு ந்துள்ளது. வேலைவாய்ப்புக்கு ஏற்ற பட்டதாரிகளை உருவாக்கவில்லை என்று குற்றச்சாட்டும் முன்வை க்கப்படுகிறது.

 

இதற்கு தீர்வு காணும் வகையில், இளங்கலை பட்டபடிப்போடு தொழில் சார்ந்த திறன் பயிற்சியை ஆயிரம் மணி நேரம் அளிக்கும் திட்டத்தை செயல்படுத்த மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

கலை, அறிவியல், வணிகவியல் ஆகிய 3 இளங்கலை பாடப் பிரிவுகளில் இது அமல்ப டுத்தப்படவுள்ளது. சாஃப்ட் ஸ்கில்ஸ, தகவல் தொழில்நுட்பம், தொழில் திறன் போன்றவற்றில் பயிற்சி அளித்து வேலைவாய்ப்பு சார்ந்த பட்டதாரிகளை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் பி.ஏ., பி.எஸ்சி, பி.காம் ஆகியவை இனி தொழிற் கல்வியாக மாறும். இத்திட்டம் 2019ம் ஆண்டு முதல் அமலுக்கு வரும் என்று மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இன்று டில்லியில் தெரிவித்தார்.

சாஃப்ட் ஸ்கில்ஸ் 250 மணி நேரம், தகவல் தொழில்நுட்பத்துக்கு 250 மணி நேரம் மற்றும் இரண்டு தனித்தனி வேலை சார்ந்த பயிற்சியில் ஏதேனும் ஒன்றை மாணவரே தேர்வு செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

You may have missed