நீட் அலைக்கழிப்பு….சிபிஎஸ்இ.க்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

சென்னை:

நீட் தேர்வு எழுத மாணவர்கள் அலைக்கழிக்கப்பட்டது குறித்து சி.பி.எஸ்.இ., தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

‘‘மாணவர்கள் தேர்வெழுத ஏன் வெளிமாநிலங்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது’’ என்று ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது. ஊடகங்களின் வெளியான செய்திகளின் அடிப்படையில் ஆணையம் தாமாக முன்வந்து இந்த நோட்டீஸை அனுப்பியுள்ளது.

எதிர்காலத்தில் இச்சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது. அதேபோல் கேரளாவுக்கு வில் நீட் தேர்வு எழுத சென்ற மாணவனின் தந்தை உயிரிழப்பு குறித்தும் விளக்கம் அளிக்க ஆணையம் உத்தரவிட்டுள்ளது.