காஷ்மீரில் மனித உரிமை மீறல் – சர்ச்சைக்குரிய அறிக்கையை வெளியிட்ட ஐ.நா.

டெல்லி:காஷ்மீரின் நடைபெற்ற வன்முறை குறித்து ஐ.நா.சர்ச்சைக்குரிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. மனித உரிமை ஆணையத்தின் தகவல்படி பாக்கிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதிகள் அமைதியாக இருப்பதாக ஐ.நா.தெரிவித்துள்ளது. ஐ.நா. வெளியிட்டுள்ள 49பக்க அறிக்கையில் காஷ்மீரில் மனித உரிமை மீறல்கள் இருப்பதாக பாக்கிஸ்தான் மற்றும் இந்தியாவை குற்றம்சாட்டியுள்ளது.
kashmir issue
இதனை தொடர்ந்து இரு நாடுகளையும் சர்வதேச விசாரணைக்கு வருமாறு ஐ.நா. அழைப்பும் விடுத்திருந்தது. ஐ.நா.வின் இத்தகைய அழைப்பை கடந்த வாரம் இந்தியா நிராகரித்துள்ளது. தவறான தகவல்களை ஐ.நா. தெரிவிப்பதாகவும், இதில் வெளிப்படையான பாராபட்சம் இருப்பதாகவும் இந்தியா கருத்து தெரிவித்தது. கடந்த வாரம் ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கையில என்.ஜி.ஓ., மனித உரிமை ஆணையம் மற்றும் பத்திரிக்கையாளர்களுக்கு ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதியில் மனித உரிமை மீறல்கள் குறித்த ஆவணங்களை தயார் படுத்தும் பணி மிகப்பெரிய சவாலாக இருப்பதாக தெரிவித்துள்ளது.

2016ம் ஆண்டு ஜூலை மாதம் காஷ்மீர் பிரச்சனையில் தீர்வுகாண நிபதையற்ற முறையில் அனுமதி கேட்டு ஐ.நா. பல சந்தர்ப்பங்களை அளித்தது. ஆனால் இந்தியா மறுத்து வந்தது. இதனை தொடர்ந்து மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையம் இந்தியா நிர்வகிக்கும் காஷ்மீர் பகுதிக்கு நிபந்தனையற்ற அணுமதியை பாக்கிஸ்தானிற்கு அளித்தது.

2016வது ஆண்டு காஷ்மீரில் புர்ஹன் வானி கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து அங்கு வன்முறை வெடித்தது. 22வயதான ஹிஜ்புல் முஜைஹிதீன் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தியதாக ஐ.நா. தனது அறிக்கையில் கூறுகிறது.

மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையம் இரு நாட்டு பிரதிநிதிகளையும் சந்தித்த பின் அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. அதில் வன்முறை வெடித்த போதும், அதன்பிறகு தற்போது உள்ள காஷ்மீருக்கும் இடையே பல முறண்பட்ட கருத்துக்களை தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து காஷ்மீர் பகுதியில் இருநாட்டிற்கு பொதுவாக கட்டுப்பாட்டு கோடு அமைந்துள்ள பகுதிகளை மனித உரிமைகள் ஆணையம் கண்காணித்து வருகிறது.

நீதிமன்றத்தின் ஆணை, பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விகள், காவல்துறையினரின் அறிக்கை ஆகியவற்றை ஆதாரமாக கொண்டு காஷ்மீரில் நடத்தப்பட வன்முறை பற்றி ஐ.நா. அறிக்கையை வெளியிட்டது. பாதுகாப்பு படையினரால் பொதுமக்கள் கொல்லப்பட்டதை நிரூபிக்கும் வகையில் ஐ.நா.வின் அறிக்கை முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக உள்ளது. பாகிஸ்தானால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட காஷ்மீர் பகுதியில் ஆய்வு செய்யப்பட்ட நிலையில் ஐ.நா. இத்தகைய அறிக்கையை வெளியிட்டது.

காஷ்மீரின் தற்போதய நிலைமை வரலாற்று பின்னணி மற்றும் அரசியல் பிரச்சனைகளின் சிக்கலான தன்மையை அங்கிகரிப்பதாக மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையம் தெரிவித்துள்ளது. எனினும் காஷ்மீர் பிரச்சனையில் இருநாட்டு எல்லைகளுக்கும் இடையில் பிரிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு கோடுகளுக்கு அருகில் வசிக்கும் மக்கள் மனித உரிமை மீறல்களால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் என ஐ.நா. கூறியுள்ளது.