மனிதக் கேடய குற்றத்திலிருந்து தப்பியவர் தற்போது சிக்கியது எப்படி?

ஸ்ரீநகர்: பணிசெய்யும் நேரத்தில், தனக்கான இடத்தில் இல்லாமல், ஹோட்டல் ஒன்றில் 18 வயது பெண்ணுடன் நுழைய முயன்ற லீதுல் கோகோய் என்ற மேஜர் நிலையிலுள்ள ராணுவ அதிகாரிக்கு, 6 மாதகால பணி அனுபவம் குறைக்கப்பட்டு தண்டணை வழங்கப்பட்டுள்ளது.

இந்த அதிகாரிதான், 2017ம் ஆண்டில் ஸ்ரீநகர் நாடாளுமன்ற இடைத்‍தேர்தலின்போது நடைபெற்ற கல்‍லெறி சம்பவத்தில், உள்ளூர் நபர் ஒருவரை, தனது ராணுவ ஜீப்பில் கட்டிவைத்து, அவரை மனிதக் கேடயமாக பயன்படுத்திய மோசமான குற்றச்சாட்டிற்கு ஆளானவர்.

அந்த சம்பவத்திற்கு, நாடெங்கிலும் பலத்த எதிர்ப்புகள் கிளம்பியபோதும், அவரது பணியைப் பாராட்டி, அவருக்கு விருது வழங்கி கவுரவித்தார் ராணுவ தலைமை தளபதி.

தற்போது, இந்த ஸ்ரீநகர் ஹோட்டல் சம்பவத்தில் சிக்கி, ராணுவ நீதிமன்ற விசாரணைக்கு ஆட்பட்டு, 6 மாத கால சீனியாரிட்டி குறைப்பு என்ற தண்டனைக்கு ஆளாகியுள்ளார் கோகோய்.

– மதுரை மாயாண்டி

Leave a Reply

Your email address will not be published.