டில்லி

னி மனித கழிவுகளை அகற்ற இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் என மத்திய அரசு  அறிவித்துள்ளது.

இந்தியாவில் கழிப்பறை என்னும் வழக்கம் ஆங்கிலேயர் காலத்துக்கு பிறகே வந்துள்ளது.    அதற்கு முன்பு ஆற்றங்கரை, தோப்புகள், வயல்கள் போன்றவை கழிப்பறைகளாகப் பயன்படுத்தப்பட்டு வந்தன.   எனவே மனிதக் கழிவுகளை அகற்ற இந்தியாவில் அப்போது தேவை இருக்கவில்லை.

ஆனால் நாகரீகம் முன்னேற முன்னேறக் கழிப்பறை பயன்பாடு வழக்கத்துக்கு வந்தது.   இந்த மனிதக் கழிவுகளை அகற்றும் பணியை மனிதர்களே செய்து வருகின்றனர்.   இந்த வழக்கம் பல்லாண்டு காலமாகத் தொடர்ந்து வருகிறது.  இதற்கு முடிவு கட்டவேண்டும் எனப் பல ஆர்வலர்கள் போராடி வருகின்றனர்.

தற்போது அதற்கு ஒரு முடிவு ஏற்பட்டுள்ளது.  மத்திய அரசு சஃபாய் மித்ரா சுரக்‌ஷா சேலஞ்ச் என்னும் திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.   இந்த திட்டத்தின் கீழ் மத்திய சமூக நீதித்துறை அமைச்சகம் இனி மனித கழிவுகளை அகற்ற இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் எனவும் அதைக் கட்டாயம் எனவும் அறிவித்துள்ளது.