1university-of-kalyani-m-a
மேற்கு வங்கத்தின் கல்யாணி பல்கலைக்கழகத்தில் ஒரு திருநங்கைக்கு பல்கலையின்  அடிப்படைச் சட்ட திட்டங்களையும் வளைத்து மனிதாபிமான அடிப்படையில் முதுகலைக் கல்வி கற்க வாய்ப்பளித்துள்ளது அப்பல்கலைகழகத்தின் நிர்வாகம்.
சுமானா பரமாணிக், 21 வயதான திருநங்கையாவார். இவர் சிறு வயதிலிருந்து ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்தவர். கணிதப் பாடத்தில் முதுகலை கற்க இப்பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பித்திருந்தார். ஆனால் இத்துறையில் மாணவர்சேர்க்கை ஏற்கனவே பூர்த்தியாவிட்டதால் சுமானாவுக்கு சீட் கிடைக்காது என்ற நிலை இருந்துள்ளது. ஆனால் சுமானாவின் பின்னனியை ஆராய்ந்து அவருக்கு மனிதாபிமான அடிப்படையில் படிக்க வய்ப்பளித்துள்ளது அப்பல்கலையின் நிர்வாகம்.
இது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியளித்திருப்பதாக சுமானா குறிப்பிட்டுள்ளார்.
தன்னை சேர்த்துக்கொண்ட பல்கலை நிர்வாகத்துக்கும், தனக்கு அன்புடன் உதவி செய்த மாநில கல்வி அமைச்சர் பார்த்தா சாட்டோபாதியாயாவுக்கும் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.