பெங்களூரு விமான நிலையத்தில் எந்திரன் : மக்கள் மகிழ்ச்சி

--

பெங்களூரு

பெங்களூரு விமான நிலையத்தில் ஒரு மனித உருவ ரோபோ அமைக்கப்பட்டு கர்நாடக மாநிலம் குறித்த தகவல் உட்பட பல தகவல்களை தந்து வருகிறது.

ரஜினிகாந்த் நடித்து புகழ் பெற்ற திரைப்படம் எந்திரன்.   அதில் அவர் மனித உருவ ரோபோவாக நடிப்பார்.    எந்த தகவலையும்  உடனடியாக உள்வாங்கி அதை தெரிவிக்கும் சக்தி அந்த ரோபோவுக்கு உண்டு.   அது திரைப்படம் என்றும் கற்பனையில் மட்டுமே இது சாத்தியம் என நினைப்பவர்கள் அந்த எண்ணத்தை இப்போது மாற்றிக் கொள்ளலாம்.

பெங்களூருவில் உள்ள சிரெனா டெக் நிறுவனம் மனித உருவில் உள்ள ரோபோ ஒன்றை நிறுவி உள்ளது.    இந்த மனித உருவ ரோபோவை பெங்களூரு விமான நிலையத்தில் சோதனைக்காக இந்த நிறுவனம் அமைத்துள்ளது.    கெம்பா என பெயரிடப்பட்ட இந்த எந்திரன் கர்நாடக மாநிலத்தை குறித்த தகவல்களுடன் மற்ற உலகத் தகவல்களையும் அளித்து வருகிறது.

விமானப் பயணிகளுக்கும் பார்வையாளர்களுக்கும் இந்த புதிய எந்திரன் அமைப்பு பெரும் மகிழ்வை உண்டாக்கி உள்ளது.