பசுக்களுக்கும் மனிதர்கள் முக்கியத்துவம் தர வேண்டும்: யோகி ஆதித்யநாத்

லக்னோ:

நாடு முழுவதும் பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் வன்முறையில் படுபடுவோர் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும் என்று உச்சநீதி மன்றம் உத்தரவிட்ட நிலையிலும், அவர்களின் அட்டகாசம் தொடர்ந்து வருகிறது.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய உ.பி.மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்,  மனிதர் கள் முக்கியம் என்றாலும், மனிதர்களைப் போல பசுக்களும் எங்களுக்கும் முக்கியம், அவர்களுக்கும் மக்கள் முக்கியத்துவம் தர வேண்டும் என்று கூறி உள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

பாரதிய ஜனதா அரசு பதவி ஏற்றபிறகு இந்துத்துவாக்களின் கொட்டம் அதிகரித்து வருகிறது. பசுக்களை அழைத்துச் செல்பவர்கள் எந்தவித விசாரணையுமின்றி, பசு பாதுகாவலர்கள் என்ற அமைப்பை சேர்ந்த வன்முறையாளர்களால் தாக்கப்பட்டும், கொல்லப்பட்டு வருகின்றனர்.

இதுபோன்ற சம்பவங்கள்  இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும் என்றும், சட்டத்தை கையில் எடுக்க அவர்கள் யார் என்றும் உச்சநீதி மன்றம் கடுமையான கண்டனம் தெரிவித் திருந்தது.

இந்த நிலையில், வடமாநிலங்களில் குறிப்பாக   உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், அரியானா போன்ற பாஜக ஆளும் உள்ளிட்ட மாநிலங்களில், பசு பாதுகாவலர்கள் எனக் கூறிக் கொள்ளும் கும்பல்  பசுமாடுகளை கொண்டு செல்வோரை குறிவைத்து தாக்குதல் நடத்துவது  தொடர்ந்து வருகிறது.

சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் பசுவை கொண்டு சென்ற ஒருவர், வன்முறைக் கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டார். இது மீண்டும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பாராளுமன்ற கூட்டத்திலும்  எதிரொலித்தது.

இந்நிலையில், செய்தியாளர்களுடன் பேசிய உ.பி. மாநில முதல்வர் யோகி,  மனிதர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும், அதே நேரத்தில் பசுக்களுக்கும் மனிதர்கள் முக்கியத்துவம் தர வேண்டும் என கூறினார்.

ஒவ்வொரு தனிநபரும், ஒவ்வொரு மதத்தினரும், ஒவ்வொரு சமூகத்தினரும் மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும்,   அதேநேரத்தில் நாமும் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது அவசியம் என்றும் கூறினார்.

தற்போதைய தாக்குதல்கள் குறித்து பேசும் காங்கிரஸ்,  1984ல் சீக்கியர்களுக்கு எதிரான வன்முறை குறித்து பேசுமா என்ற யோகி,  பசு பாதுகாப்பு கும்பலால் நடத்தப்படும் வன்முறைக்கு காங்கிரஸ் கட்சி தேவையில்லாமல் முக்கியத்துவம் கொடுப்பதாக குற்றம் சாட்டினார்.

பிரதமர் மோடியின் பாணியை காப்பியடித்தே, ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் மோடியை கட்டியணைத்தார் என்றும், ராகுலின் செயல்  குழந்தை தனமானது. ராகுலின் இந்த நடவடிக்கை  மூலம் அவருக்கு மனமுதிர்ச்சி இல்லை என்பது தெரியவந்துள்ளதாகவும் யோகி கூறினார்

You may have missed