புனரமைப்பு செய்யப்பட்ட வரலாற்று புகழ்மிக்க சென்னையின் ஹூமாயுன் மஹால்!

சென்னை: தமிழக தலைநகரிலுள்ள வரலாற்று பாரம்பரியம் மிக்க ஹூமாயுன் மஹாலின் சுவர்களில் வளர்ந்து படர்ந்திருந்த தாவரங்கள் கட்டடத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பொதுப்பணித்துறையால் அகற்றப்பட்டன.

இந்த கட்டடம் 250 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்தக் கட்டடத்தின் சுவர்களில் மரங்களின் வேர்கள் மற்றும் கிளைகள் ஊடுருவி பரவியிருந்ததோடு, புதர்களும் மண்டியிருந்தன. அந்த கிளைகள் மற்றும் வேர்களில் துளைகள் இடப்பட்டு, அந்த துளைகளில் ரசாயனக் கலவை செலுத்தப்பட்டது.

கடந்த 10 நாட்களாக, ஒவ்வொரு மணி நேரத்திற்கும் இந்த செயல்பாடு மேற்கொள்ளப்பட்டு, படர்ந்திருந்த தாவரங்கள் கொல்லப்பட்டு காயவைக்கப்பட்டன. இதன்மூலம், கட்டடத்திற்கு தீங்கு விளைவித்த தாவரங்கள் நிரந்தரமாக அகற்றப்பட்டன.

கட்டடத்திற்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை என்றும், ஹூமாயுன் மஹாலை புனரமைக்கும் பணி என்பது கடும் சவாலானதாக இருந்தது என்று பாரம்பரிய அம்சங்களின் பாதுகாவலர் எஸ்.பரமசிவன். இவர் ஏற்கனவே, சென்னைப் பல்கலையின் செனட் ஹவுஸை புனரமைப்பு செய்தவர்.

இந்தக் கட்டடம் இந்தோ-சராசனிக் முறையில் கட்டப்பட்டதாகும். இரண்டு அடுக்கு முறையில் கட்டப்பட்ட இந்த கட்டுமானம், 81000 சது அடியில் அமைந்துள்ளதோடு, 189 கதவுகளையும் கொண்டது. அந்த கதவுகளில் மிகவும் நீளமானது 10 அடி உயரம் கொண்டதாகும். இந்தக் கட்டடம் ஒருகாலத்தில் ஆர்காட்டு நவாப்பின் வசிப்பிடமாக இருந்தது.