குருவை அவமதிப்பதுதான் இந்து கலாச்சாரமா?: ராகுல் காந்தி கேள்வி

சந்திரப்பூர்: பிரதமர் மோடி, தனது குரு அத்வானியை அவமதித்துவிட்டார். குருவை அவமரியாதை செய்வதுதான் இந்து கலாச்சாரமா? எனக் கேட்டிருக்கிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.

எப்போதுமே இந்துச் கலாச்சாரம் பற்றி பேசும் கட்சி பாரதீய ஜனதா. இந்து கலாச்சாரத்தைப் பொறுத்தவரை, அங்கே குருதான் எல்லாமே. ஆனால், தனது குரு அத்வானியை, பிரதமர் நரேந்திர மோடி அவமானப்படுத்துகிறார்.

எனவே, இதுதான் இந்துக் கலாச்சாரமா? என்பதை அவர் தெளிவுபடுத்த வேண்டும்” என்றுள்ளார்.

குஜராத்தின் காந்திநகர் மக்களவைத் தொகுதியில் தொடர்ந்து போட்டியிட்டு வந்த அத்வானிக்கு, இந்தமுறை வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. அத்தொகுதியில், பாரதீய ஜனதா தலைவர் அமித்ஷா போட்டியிடுகிறார். எனவே, இதனை அடிப்படையாக வைத்தே, ராகுல்காந்தி இந்த தாக்குதலை தொடுத்துள்ளார்.

மேலும், பாரதீய ஜனதாவை அரசியல்ரீதியாக எதிர்ப்பவர்கள். நாட்டின் எதிரிகள் அல்ல” என்று அத்வானி மிக சமீபத்தில் தனது வலைப்பூவில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

– மதுரை மாயாண்டி

Leave a Reply

Your email address will not be published.