ஓயாமல் செல்போனில் பேச்சு ,,மனைவி கையை துண்டித்த கணவன்..

ஓயாமல் செல்போனில் பேச்சு ,,மனைவி கையை துண்டித்த கணவன்..

சத்தீஷ்கர் மாநிலம் ஜாஸ்பூர் பகுதியைச் சேர்ந்த லலித் என்ற கூலித்தொழிலாளி, கொரோனா பாதிப்பு காரணமாக அங்குள்ள முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.

மனைவி பியாரின், செல்போனை அவர் தொடர்பு கொண்ட போதெல்லாம் ‘பிஸி’ யாகவே இருந்துள்ளது.

மனைவியின் நடத்தையில் லலித்துக்கு சந்தேகம் ஏற்பட்டது. கோபத்தில் மனைவியை போனில் தொடர்பு கொண்டார். வழக்கம் போல் ‘பிஸி’.

ஆத்திரம் அடைந்த லலித், கொரோனா முகாமில் இருந்து தப்பித்து வீட்டுக்குச் சென்றுள்ளார்.

அப்போதும் லலித் மனைவி போனில் யாருடனோ பேசிக்கொண்டிருந்தார்.

கோபத்தின் உச்சிக்கே சென்ற லலித், வீட்டில் கிடந்த கோடாரியை எடுத்து, ‘’இந்த கை தானே போன் பேசப் பயன் படுகிறது?’’ என்று கூச்சலிட்டு, மனைவி பியாரின் வலது கையை துண்டித்துள்ளார்.

உடனடியாக பியாரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

’’தாமதம் ஆகி விட்டதால் கையை மீண்டும் ஒட்ட வைக்க முடியாது’’ என்று டாக்டர்கள் கை விரித்து விட்டனர்.

அந்த கொரோனாவால் கொடூரத்தை அரங்கேற்றிய  கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

– ஏழுமலை வெங்கடேசன்