சாப்பாடு கொஞ்சம் லேட்.. மனைவியைக் கொன்ற கணவன் 

சாப்பாடு கொஞ்சம் லேட்.. மனைவியைக் கொன்ற கணவன்

பஞ்சாப்  லூதியானாவின் நியூ அசோக் நகர் பகுதியில் உள்ள தச்சுத் தொழில் செய்யும் அவ்தார் சிங், அவரது மனைவி ஜஸ்வீர் கவுர் மற்றும் 2  ஆண் பிள்ளைகள் ஆகியோர் வசித்துவந்தனர். குடிப்பழக்கம் உடைய அவ்தார் சிங் எப்போதும் குடித்துவிட்டு தன் மனைவியுடன் சண்டையிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். மேலும் தன் மனைவி மீது சந்தேகமடையும் குணமும் உடையவர் என்பதால் அவர்களுக்கிடையே வாக்குவாதமும் ஏற்படும் எனக் கூறப்படுகிறது.

சில தினங்களுக்கு முன்  அவ்தார் சிங், குடித்துவிட்டு வந்தவர் தன் மனைவியிடம் உணவு பரிமாறுமாறு கூறியுள்ளார். ஆனால் ஜஸ்வீர் கவுர் பின்னுக்கு உணவு தயாராகவில்லை, சிறிது நேரம் பொறுக்குமாறும் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவ்தார் சிங், கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மனைவியாய் தகாத வார்த்தைகளில் திட்டி, மேஜை மேல் இருந்த கத்தரிக்கோலை எடுத்து ஜஸ்வீர் கவுர் வயிற்றில் குத்தியுள்ளார். மேலும் அவரது கழுத்து, மார்பு மற்றும் வயிற்றில் பல முறை கத்தரிக்கோலால் குத்தி கொலை செய்து அங்கிருந்து தப்பியுள்ளார்.

அம்மாவின் நிலையைப் பார்த்து, கத்தி கதறிய பிள்ளைகள் அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைத்துள்ளனர். மேலும் அப்போது ஜஸ்வீர் உயிருக்குப் போராடிய நிலையில் இருந்ததால் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று போலீசாருக்கும் புகார் அளித்துள்ளனர் அக்கம்பக்கத்தினர். ஆனால் சிகிச்சை பலனின்றி ஜஸ்வீர் உயிரிழந்தார்.

 தப்பியோடிய அவ்தார் சிங்கை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்ட போலீசார் அவரை கைது செய்து, அவர் மீது ஐபிசி பிரிவு 302 இன் கீழ் கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்த சம்பவமும் அப்பகுதி மக்களை அதிர்ச்சியடையச் செய்ததுள்ளது.  அத்துடன் ஆத்திரத்தில் மனைவியைக் கொலை செய்யும் அளவிற்குச் சென்றதில் தற்போது இரு பிள்ளைகள் தாயையும் தந்தையையும் இழந்து நிற்கின்றனர்.

You may have missed