பாடகியை கொன்று விட்டு தப்பி ஓடிய கணவர்

தராபாத்

ந்தேகத்தின் காரணமாக பாடகியான மனைவியைக் கொன்று விட்டு ஒரு கணவர் தப்பி ஓடி உள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த பாடகி சானியா பேகம். அவர் ஷேக் சல்மான் என்பவரை திருமணம் செய்துக் கொண்டுள்ளார். அவர்களுக்கு ஒரு மகன் உள்ளனர். அவர்கள் ஐதராபாத்தில் சண்டோஷ் நகரில் ஒவைசி காலனி என்னும் இடத்தில் வசித்து வருகின்றனர்.

சல்மானுக்கு தனது மனைவி தன்னை ஏமாற்றுவதாக சந்தேகம் இருந்து வந்துள்ளது. அதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சானியாவின் வீட்டில் இருந்து துர்நாற்றம் அடிப்பதை உணர்ந்தனர்.

உடனடியாக அவர்கள் காவல் துறைக்கு தகவல் அளித்தனர். காவலர் வீட்டினுள் சானியா பேகம் தீக்காயங்களுடன் இறந்து கிடந்ததைகண்டுபிடித்துளனர். அவருடைய கைகளும் கால்களும் கட்டப்பட்டிருந்தன. சல்மானைக் காணவில்லை.

இது குறித்து காவல்துறை அதிகாரி ஒருவர், “கடந்த 23 ஆம் தேதி இரவு கொலை நடந்துள்ளது. சல்மானுக்கும் சானியாவுக்கும் நடந்த சண்டையில் சல்மான் அவரை கொன்றுள்ளார். அதன் பிறகு அந்த சடலத்தின் மீது நெருப்பு வைத்து விட்டு தப்பி உள்ளார். இது குறித்து வழக்கு பதிந்து சல்மானை தேடி வருகிறோம்” என தெரிவித்துள்ளார்.

You may have missed