பிறக்கப்போகும் குழந்தை ஆணா? பெண்ணா? என்று பார்ப்பதற்கு, மனைவி வயிற்றை அறுத்த  கணவன் ..

த்தரபிரதேச மாநிலம் பாடூம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த பன்னாலால் என்பவருக்கு ஏற்கனவே ஐந்து பெண் குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் அவர் மனைவி அனிதா, மீண்டும் கர்ப்பம் தரித்தார்.

அந்த ஊர் கோயில் பூசாரி, பன்னாலாலிடம் ‘ உனக்கு பிறக்கப்போகும் 6 வது குழந்தையும் பெண் தான்’’ என்று ஜோதிடம் கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பன்னாலால், பூசாரி சொல்வது உண்மையா என்பதை அறிவதற்காக நேற்று முன்தினம் 4 மாத கர்ப்பிணியாக இருந்த மனைவியின் வயிற்றை அரிவாளால் அறுத்துள்ளார்.

இதனால் ரத்த வெள்ளத்தில் மிதந்த அனிதாவை பரேலியில் உள்ள அரசு மருத்துவமனையில் உறவினர்கள் அனுமதித்தனர். அங்கு அனிதாவின் உடல் நிலை மோசம் அடைந்ததால், டெல்லியில் உள்ள சப்தர்ஜிங் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அனிதாவுக்கு. டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்து அவரையும், குழந்தையையும் காப்பாற்றி உள்ளனர்.

இந்த கொடூர செயலில் ஈடுபட்ட பன்னாலால் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை அறிய கர்ப்பிணியின் வயிற்றை கணவனே அறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

-பா.பாரதி.