காதலின் வெற்றி: புகார் கொடுத்த மனைவியை பாடல் பாடி மயக்கிய கணவர்!

ஜான்சி,

ணவர் மனைவிக்கு இடையே ஏற்பட்ட சண்டை காரணமாக, கணவர்மீது வழக்கு தொடர்ந்த மனைவி, காவல் நிலையத்தில் கணவரின் பாட்டுக்கு மயங்கி மீண்டும் அவருடன் இணைந்தார்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜான்சி மாவட்டத்தை சேர்ந்த இளம் தம்பதியிடம் கருத்து வேறுபாடு எழுந்தது. இதையடுத்து அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றி மோதலாக மாறியது.

இதையடுத்து தனது கணவர்மீது அந்த பெண் அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகார் குறித்து, தமபதியினரை காவல் ஆய்வாளர் விசாரணைக்கு அழைத்திருந்தார்.

விசாரணைக்கு தம்பதிகள் இருவரும் தனித்தனியே ஆஜராயினர். அப்போது, அந்த இளம்பெண்ணின் கணவர், தனது மனைவிக்கு பிடித்தமான பாடலை பாடினார். அந்த பாடலுக்கு மயங்கிய அந்த பெண் அவரது தோளில் சாய்ந்தார். இதன் காரணமாக இருவருக்கும் இடையே மீண்டும் ஊடல் ஏற்பட்டது. இருவரும் தங்களது கருத்து வேறுபாடுகளை மறந்து ஒருவருக்கொருவர் அளவளாவி கொண்டனர்.

இந்த அறிந்த காவல்துறையினர் அவர்கள் இருவருக்கும் புத்திமதி சொல்லி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.