ராஜபாளையம் பேருந்து நிலையத்தில் அரிவாள் வெட்டு – சிசிடிவி காட்சி
ராஜபாளையம்
ராஜபாளையம் பேருந்து நிலையத்தில் ஒரு கணவன் மனைவியை வெட்டிக் கொன்ற காட்சியின் சிசிடிவி பதிவு வெளியாகி உள்ளது.
ராஜபாளையத்தில் தெற்கு வெங்க நல்லூர் பகுதியில் வசித்து வருபவர் மதீஸ்வரன். இவர் மனைவி பிரியா. இருவருக்கும் இரு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. மதீஸ்வரனுக்கு பிரியாவின் நடத்தையின் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதனால் இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ராஜபாளையம் புதிய பேருந்து நிலையத்தில் பிரியா தனியாக நின்றுக் கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த மதீஸ்வரன் அவரிடம் எங்கு செல்கிறாஉ எனக் கேட்டுள்ளார். அதற்கு சரியாக பதில் சொல்லாததால் மதீஸ்வரன் பிரியாவிடம் மேலும் சத்தம் போட்டுள்ளார். இருவருக்கும் சண்டை முற்றியது.
மதீஸ்வரன் தன்னிடம் இருந்த அரிவாளால் பட்டப் பகலில் பலபேர் உள்ள பேருந்து நிலையத்தில் பிரியாவை சரமாரியாக வெட்டி உள்ளார். காயத்துடன் கீழே விழுந்த பிரியாவை அங்குள்ளவர்கள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அத்துடன் மதீஸ்வரனை காவல்துறையினர் கைது செய்துள்ள்னர். பிரியா மருத்துவமனியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தற்போது இந்த சம்பவத்தின் சிசிடிவி பதிவு வெளியாகி உள்ளது.